அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானைத் துதித்து தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் எவ்வித தடைகளுமின்றி வெற்றி பெறவும் .. இன்றைய நாள் ஓர் இனிய நன் நாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! “ நமசிவாய “ என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூலமந்திரம் .. சிவம் என்றால் “ மங்களம் “ என்று பொருள் .. யஜுர்வேதத்தின் நடுநாயகமானது ஸ்ரீருத்திரம் .. அதன் நடுநாயகமே “ நமசிவாய “ .. தீட்சை பெற்றிருந்தாலும் .. பெறாவிடினும் “ நமசிவாய “ என தாயைக் கூவியழைக்கும் சேய்போல அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு .. கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில் வந்துசேரும் .. நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப் போல .. சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களை எல்லாம் சிவமயமாக்குகிறார் .. “ என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை .. இனித் தெய்வமே ! உன் செயல் என்று உணரப் பெற்றேன் ! இந்த ஊனெடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை .. பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ இங்ஙனம் வந்து மூண்டதுவே “ .. ( பட்டினத்தார் ) சிவத்தை அணைத்துக் கொண்டால் .. யமனும் நமை வணங்குவான் .. ஹர ஹர ஹர ஹர ! மகாதேவா ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. START THE DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. HAVE A SUCCESSFUL DAY .. " OM NAMASHIVAAYA " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment