அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனைத் துதித்து தங்களனைவருக்கும் சகலயோகங்களும் .. வளங்களும் பெருக பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் .. !! .. இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமல்ல ஸ்ரீகுருபகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும் .. மயில்வாகனம் - முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு .. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றிவர உதவிய மயில் .. மந்திரமயில் .. சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான் .. இது தேவமயில் .. பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில் தான் .. அசுர மயில் .. சிக்கல் - ” சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் “ என்பர் .. சிக்கல் தலத்தில் தான் முருகப்பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார் .. எனவே முருகனை நாம் நம்பிக்கையுடன் வணங்கிட புனிதகங்கை போன்று ஆறாக அருள்மழை பெய்து அவகுணங்களை அடியோடு அழித்து ஞானானந்த பிரகாசத்தில் நம்மை ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்வோம் .. குகமயமாக ஆவோம் .. “ ஸர்வம் குக மயம் ஜகத் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM MURUGA "
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment