அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமும் கூடிவருவது விசேஷம் .. மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! .. இன்றைய ஏகாதசி திதியை ‘ மோகினி ஏகாதசி ‘ என்று கூறப்படுகிறது .. அனைவரும் இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்துவந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது .. இந்த ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் மனிதர்களின் சகல பாபங்களும் .. துக்கங்களும் அழிக்கப்படுகிறது .. இதன் பிரபாவத்தால் மனிதர்கள் மோகம் என்னும் மாயையின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுவர் .. துக்கத்தால் வாழ்க்கையில் துன்பப்படும் அனைவரும் இந்த மோகினி ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து நன்மை அடைவாராக என ‘மகரிஷி வசிஷ்டர் ‘ ஸ்ரீராமருக்கு உபதேசித்தார் .. மோகினி ஏகாதசி விரத மஹாத்மிய கதை - சரஸ்வதி நதியின் கரையில் ‘பத்ராவதி’ என்னும் பெயர்கொண்ட நகரம் அமைந்திருந்தது .. அந்நகரை த்யூதிமன் என்னும் பெயர்கொண்ட அரசன் ஆட்சி புரிந்து வந்தான் ..அந்நகரில் வற்றாத தனம் .. தான்யசம்பத்துக்களுடன் தனபால் என்னும் பெயர் கொண்ட வியாபாரி வசித்து வந்தான் .. பகவான் மஹாவிஷ்ணுவின் பக்தனாக அவன் மிகுந்த தர்மசிந்தனையுடன் நகரில் ஆங்காங்கே அன்னதான உணவகங்கள் .. குடிநீர் பந்தல் .. குளம் குட்டை தர்மசத்திரங்கள் ஆகியவற்றை அமைத்திருந்தான் .. வியாபாரிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்தனர் .. அவர்களில் மூத்தவன் கொடிய பாபவினைகளை புரியும் பாபியாகவும் .. துஷ்டனாகவும் இருந்தான் அவன் துஷ்டர்களுடன் நட்புகொண்டு சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தான் .. அவனது செய்கையால் துக்கத்தில் வாடிய வியாபாரி தனபால் மற்றும் குடும்பத்தினரும் சுடுசொற்களால் நிந்தனைசெய்து வீட்டைவிட்டு வெளியேற்றினர் .. தான் அணிந்திருந்த விலையுர்ந்த ஆடை ஆபரணங்களை விற்று கிடைத்த பணத்தில் நாட்களை கடத்தி வந்தான் .. பணம் கரைந்து போயிற்று .. நண்பர்களும் அவனைவிட்டு விலகிப் போயினர் .. பசியும் தாகமும் வருத்தி எடுக்க வேதனை தாளாமல் திருடுவது என்றும் முடிவுக்கு வந்தான் .. இரவுநேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு அதன்மூலம் கிட்டிய வருமானத்தால் வாழ்க்கையை நடத்திவந்தான் .. ஒருநாள் நகரகாவலரிடம் கையும் களவுமாக பிடிபட்டான் .. ஆனால் வியாபாரியின் மகன் என்று அறிந்ததும் திருந்திவாழுமாறு அறிவுரை கூறி விட்டுவிட்டனர் .. ஆனால் சில நாட்களில் மீண்டும் அகப்பட்டபோது சிறையில் அடைத்தனர் .. சிறையில் சித்திரவதையை அனுபவித்து பிறகு அந்நகரைவிட்டும் வெளியேற்றினர் .. மிகுந்த மனவருத்தத்துடன் நகரைவிட்டு வெளியேறி காட்டில் வசிக்கத் தொடங்கினான் .. பிராணிகளை கொன்றும் .. விற்றும் பசியாறினான் .. வேட்டையில் ஏதும் சிக்காமல் போகவே களைப்பில் பசியும் தாகமும் வருத்து எடுக்க உணவைத்தேடி அலைந்து கடைசியில் கௌடின்ய முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான் .. கௌடின்ய முனிவர் கங்கையில் நீராடிவிட்டு வந்துகொண்டிருந்தார் .. அவரின் நனைந்த வஸ்திரத்தின் நுனியிலிருந்து விழுந்த நீர்த்துளிகள் அவன்மீதுபட்ட மாத்திரத்தில் பாபியான அவனுக்கு நற்சிந்தனையும் .. நல்லெண்ணமும் உருவாகியது .. முனிவரின் அருகில் சென்று இருகரம் கூப்பி கண்ணில் நீர்மல்க “ முனிசிரேஷ்டரே ! நான் என்வாழ்க்கையில் மன்னிக்கமுடியாதளவு பாபம் புரிந்துள்ளேன் .. என் பாபவினைகளிலிருந்து நான் முக்தி பெறுவதற்கு ஏதாவது எளிதான செலவில்லாமல் கடைபிடிக்கக்கூடிய ஒருவழியை கூறி அருளவேண்டும் என்றான் .. முனிவரும் மோகினி ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடித்து உன் பாபங்கள் எல்லாம் நீங்கப் பெற்று புதுவாழ்வு பெறுவாயாக என்று வாழ்த்தியருளினார் .. மோகினி ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் அவனது அனைத்து பாபவினைகளும் அகன்று நல்வாழ்க்கை பெற்றான் .. விரதத்தின் புண்ணியபலனால் கருடவாகனத்தில் விஷ்ணுலோகத்தை அடையும் பிராப்தமும் பெற்றான் .. இவ்விரதத்தினால் மோகம் என்னும் மாயை அகன்று மனிதர் முக்தியை பெறுகின்றனர் .. இவ்வுலகில் இதற்கு நிகரான இணையான விரதம் வேறெதுவும் இல்லை .. இவ்விரத மஹாத்மிய கதையை கேட்டவரும் .. படிப்பவரும் ஓராயிரம் கோ (பசு) தானம் செய்த புண்ணியத்திற்கு இணையான புண்ணியத்தைப் பெறுவர் .. ”ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ !! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 'EKADASI DAY' WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE BLESS YOU AND SHOWER YOU WITH GOOD HEALTH WEALTH AND HAPPINESS .. HAVE A SUCCESSFUL DAY TOO .. " OM NAMO NAARAAYANAA " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment