அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியாதிக்கம் பூமியில் நிறைந்த நாள் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன் நாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் சூரிய காயத்ரி - ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! “ லோக கர்த்தா “ என வேதங்கள் புகழும் சூரிய பகவான் பிரத்யக்ஷமாக நம் கண்முன்தோன்றி அருள்புரிபவன் .. அங்கிங்கெனாதபடி எங்கும் தன் அமுத கிரணங்களை வீசி உலகை வழிநடத்துபவர் .. உலகில் எவ்வுயிர்க்கும் ஏற்றத்தாழ்வுகளின்றி தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தரும் தேவதேவன் .. அவரது ஒளிக்கற்றைகளில் பேதமில்லை .. நம் எல்லோருக்கும் மேல் வானத்தில் பிரகாசித்து எல்லா உயிர்கள் .. பொருட்கள் .. மீதும் தன் ஒளிக்கிரணங்களை பாரபட்சமின்றிப் பொழிபவர் .. பேதமில்லாமல் யாவரையும் சமமாக நோக்கும் நெறியை நமக்குச் சொல்லாமல் சொல்பவர் .. தன்னை உதிக்கக்கூடாதென்று தன் கற்பின்சக்தியால் சாபமிட்ட நளாயினி .. மறுபிறவியில் திரௌபதியாகப் பிறந்தபோது அவளது பக்திக்கு இரங்கி அக்ஷ்யபாத்திரம் அளித்த கருணைப் பெருங்கடல் சூரியபகவான் .. சூரியனைப் போற்றுவோம் ! அவரது திருவருளையும் அருட்கடாக்ஷ்த்தைப்பெறுவோமாக .. “ ஓம் சூரியபகவானே நமோஸ்துதே ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. & HAPPINESS .. " JAI SURYADEV " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment