அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று பைரவருக்கு உகந்த அவரது ஜென்ம நட்சத்திரமான ” சித்திரை பரணியாகும் “ இன்றே அவர் அவதரித்தார் .. தங்களனைவருக்கும் அனைத்து தீராவினைகள் யாவும் நீங்கி அனைத்திலும் வெற்றிபெற வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் சூலஹஸ்தாய வித்மஹே ! ஸ்வாந வாஹனாய தீமஹி ! தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர் .. நவக்கிரகங்களுக்கும் பிராணதேவதையாக இருப்பவரும் பைரவரே ! தேவ .. அசுர .. மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனிபகவான் ஆவார் .. சனிக்கு வரம்தந்து இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார் ! .. சனியின் வாதநோயை நீக்கியவரும் பைரவரே ! பைரவருக்கு பலவிரதங்கள் இருந்தாலும் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் அன்று கடைப்பிடிக்கப்படும் இந்த விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது .. இந்தநாளில் சிவபெருமானையும் விரதம் இருந்து வழிபடலாம் ..விரதகாலத்தில் திருமுறை ஓதல் நன்று .. பகல் பொழுதில் பால் .. பழம் உண்டு விரதத்தை முடிக்கலாம் .. அன்றைய தினம் மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று பைரவருக்கும் சிவபெருமானுக்கும் நெய்விளக்கேற்றி விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும் .. இந்த சித்திரை பரணியில் பைரவருக்கு விரதத்தை தொடங்கி வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில் பைரவருக்கு வழிபாடு செய்யலாம் .. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை ஒழித்து இன்பம் அடைய பைரவர் வழிவகை செய்வார் என்பது நம்பகமான உண்மை .. பரணி நட்சத்துக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும் .. பலனும் அதிகம் கிடைக்கும் .. ஏனெனில் பைரவர் அவதரித்த நட்சத்திரமே பரணி ! பைரவரைப் போற்றுவோம் வாழ்வில் அனைத்து கஷ்டங்களும் நீங்கி அனைத்துவிதமான சந்தோஷங்களையும் பெறுவோமாக .. “ ஓம் பைரவாய நமஹ “ GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAVA .. " OM BHAIRAVAAYA NAMAHA "

No comments:

Post a Comment