PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ‘அட்சய திரிதியை’ நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .. அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன் நாளாகவும் .. சகலசௌபாக்கியங்களையும் பெறுவீர்களாக .. ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! விஷ்ணுபத்ந்யை ச தீமஹி ! தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !! .. நட்சத்திரங்கள் .. திதிகள் எல்லாம் நம் அன்றாட வாழ்வில் முக்கியபங்கு வகிப்பவை .. சிலமாதங்களில் வரும் திதிகளுக்கு தனிசிறப்பு உண்டு .. அந்தவகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகுவரும் திருதியை திதி .. “அட்சயதிருதியை “ என போற்றப்படுகிறது .. ’அட்சயம்’ என்றால் வளர்வது .. குறையாதது .. என்று பொருள் அன்றைய தினத்தில் செய்கிற .. ஆரம்பிக்கிற எல்லாகாரியங்களும் வெற்றிகரமாக நடக்கும் .. நல்ல பயனைத்தரும் என்பது வேதவாக்கு .. இந்த நாளைப்பற்றி புராணங்களிலும் .. நாடிகளிலும் .. தர்மசாஸ்திரங்களிலும் பலவிஷயங்கள் சொல்லப்படுகிறது .. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பால்யநண்பர் குசேலன் வறுமையில் வாடுகிறார் .. கிருஷ்ணரை சந்திக்க முடிவெடுத்து ஒருபிடி அவலை தன் மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார் .. அவரை நன்கு உபசரித்த கிருஷ்ணபகவான் அவர் அன்போடு கொண்டுவந்த அவலை மகிழ்ச்சியுடன் எடுத்து உண்டு அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து “அட்சயம் உண்டாகட்டும் “ என்று வாழ்த்தி அனுப்புகிறார் .. அதேகணத்தில் குசேலரின் குடிசைவீடு மாடமாளிகையாக மாறுகிறது .. அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடிகொள்கின்றன .. இந்த அற்புதம் நிகழ்ந்ததும் அட்சய திருதியை நாளிலே ! மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான “பரசுராமனின் “ பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது .. சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள் ..கௌரவர் சபையில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது ஆடைகளை அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்தநாளே என்கிறது வியாசபுராணம் .. ஐஸ்வர்ய லக்ஷ்மி அவதரித்த நாள் .. சங்கநிதி .. பத்மநிதியை குபேரன் பெற்ற நாள் மஹாவிஷ்ணுவின் வலர்மார்பில் மஹாலக்ஷ்மி இடம்பிடித்தநாள் .. என பல சிறப்புக்களை உடையது அட்சயதிருதியை நாள் .. “பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் “ என்பது ரமணர் வாக்கு .. இல்லாதோர் .. இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள் தர்மங்கள் .. பலமடங்கு உதவி செய்தவருக்கே ஏதாவதொருவகையில் திரும்ப கிடைக்கும் .. வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தித் தரும் .. அட்சய திருதியை நாளில் நாம் செய்யும் தானதருமங்கள் நமக்கு புண்ணியத்தைச் சேர்க்கும் .. இந்நாளில் சுயநலத்துடன் செய்கிறகாரியங்களைவிட .. பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும் .. ஏழைநோயாளிகளுக்கு .. சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேஷ்டி .. சேலை .. போர்வை தானமாகக் கொடுக்கலாம் .. ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம் .. ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு .. இனிப்புகள் வழங்கலாம் .. பசு .. நாய் .. பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி .. செல்வவளம் ஏற்படும் .. சமீபகாலத்தில்தான் ஆடம்பரபொருட்கள் தங்கம் .. வெள்ளி .. வைரம் வாங்கும் வழக்கம் உருவானது .. ” மகிழ்வித்து மகிழ் “ என்று சொல்வார்கள் எனவே மற்றவர்கள் மகிழும் வகையில் தானதருமங்கள் செய்து .. பலபுண்ணியங்கள் பெற்று .. ஆயுள் .. ஆரோக்கியம் நிறைந்த வளமானவாழ்வு பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY AND BEST WISHES FOR THE ' AKSHAYA TRITIYA ' .. MAY GODDESS LAXMI BLESS YOU AND SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI MATA DI " ..


No comments:

Post a Comment