PANVEL BALAGAR
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று சதுர்த்தி விரதமும் சேர்ந்து வருவதால் விநாயகரைத் துதித்து தங்கள் அனைவருக்கும் சிறந்த கல்வி அறிவும் .. தெளிந்த ஞானமும் .. சிறந்த செல்வமும் .. துன்பங்கள் விலகி இன்பமும் .. உடல் ஆரோக்கியமும் பெற்று மகிழ்ச்சிகரமாக வாழ பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! .. கஜானனம் .. பூதகணாதி ஸேவிதம் .. கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் .. உமாஸுதம் சோகவினாச காரணம் .. நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் ! சாரம் - யானை முகம்படைத்தவரும் பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும் .. பழுத்த ஜம்பூபழத்தின் ரசத்தை சாப்பிடுபவரும் .. உமாவின் குமாரரும் .. நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக் காரணபூதராக விளங்குபவரும் விக்னங்களுக்கே (தடங்கல்களுக்கு) ஈஸ்வரரும் (அதிபதி) ஆகிய கணபதி பகவானின் பாதக்கமலங்களில் தண்டனிடுகிறேன் .. அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ”ஓம்” எனும் ஓங்காரவடிவமாக விளங்குபவர் ஸ்ரீவிநாயகப் பெருமான் .. மிகவும் எளிமையானவர் .. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர் .. வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன் .. அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன் ஸ்ரீவிநாயகரே முழுமுதற்கடவுள் எனக்கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாடு முறையாகும் .. ஸ்ரீவிநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்தபோதிலும் சதுர்த்திவழிபாடு சிறந்தவழிபாடாகும் .. சதுர்த்தியில் விரதமிருந்து ஆனைமுகனை முறையாக வழிபட்டால் வேண்டிய வரத்தையும் காரிய அனுகூலத்தையும் அவர் பெருமையுடன் நமக்கு அளிப்பார் .. எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம் .. கணங்களுக்கெல்லாம் அதிபதியாவதால் அவரை ‘கணபதி’ என்று சொல்கின்றோம் .. எனவே நாம் தேவ .. மனித .. அசுர .. கணத்தில் பிறந்தவாராக இருந்தாலும் அனைவரும் வணங்கவேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமானே ! தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழுநம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்துசேரும் .. துன்பங்கள் அனைத்தும் தூரவிலகி ஓடிடும் .. விநாயகரைப் போற்றுவோம் !அவரது அருட்கடாக்ஷ்ம் பெறுவோமாக ! .. ’ஓம் விக்னேஷ்வராய நமஹ ‘ வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. MAY THE DIVINE BLESSINGS OF LORD GANESH BRINGS YOU ETERNAL BLISS & FULFILL ALL YOUR WISHES .. " JAI GANESH "
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment