அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றி வணங்கப்படும் ஷிர்டி சாய்பாபாவினதும் நாளும் ஆகும் .. அவரைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. தங்களது அனைத்து காரியங்களும் தடைகளின்றி வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் ஷிர்டிவாஸாய வித்மஹே ! சச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ சாய் ப்ரசோதயாத் !! .. பாபா தனது பக்தர்களிடம் நம்பிக்கை .. பொறுமை .. என்ற இரண்டு வார்த்தைகளை எப்பொழுதும் கடைபிடிக்கவேண்டும் என வலியுறுத்துவார் .. காரணம் நல்லவன் துன்பப்படும்போது தாமாக அவனை வலியத்தேடிச்சென்று அவனுக்கு அனுக்கிரகம் செய்கிறார் இதற்காக அவர் மாறுவேடங்களில் சென்று கணக்கற்ற அற்புதங்களைத் திட்டமிட்டுச் செய்கிறார் .. வீட்டினுள்ளோ .. வெளியிலோ .. அல்லது வழியிலோ நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்கள் அனைவரும் என்னுடைய வெளிப்பாடுகளே ! அவர்கள் அனைவருள்ளும் நான் உறைகிறேன் என்கிறார் பாபா .. எந்தவடிவில் அவர் வருகிறார் என்பது தெரியாமலே நமக்கு நன்மை நடக்கும் .. ஏற்கனவே அவர் திட்டமிட்டு செயல்படுவதால் எந்த விஷயத்திலும் அவரது பக்தன் அவசரப்படத்தேவையில்லை .. பொறுமையாக அவரை நம்பிக்கொண்டிருந்தால் போதுமானது அவர் நினைப்பதே நடக்கும் .. அவரே வழியைக் காட்டுவார் .. நம்முடைய இனிய விருப்பங்கள் ஒருகணமும் தாமதமின்றி நிறைவேறும் .. நேரம்வரும் பாபா கூறியிருக்கிறார் அதுவரை பொறுமை காக்கவேண்டும் .. எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் பொறுமையாக இருப்பது மட்டுமே நம்மை கரைசேர்க்கும் உபாயம் என பாபா கூறியிருக்கிறார் .. பாபாவைப் போற்றுவோம் சகலதும் வெற்றி பெறுவோம் ! .. வெற்றி நிச்சயம் ! “ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE DIVINE BLESSINGS OF SHIRDI SAI .. MAY HE SHOWER HIS BLESSINGS WITH GOOD HEALTH .. WEALTH .. AND A SUCCESSFUL LIFE .. " OM SAI RAM "

No comments:

Post a Comment