அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் சுபீட்சம்மிக்க நன்னாளாய் மலர்ந்திடவும் .. மனநலமும் .. உடல் நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! .. சிவபெருமானுக்கு பிரியமான பூக்கள் - சிவபெருமானுக்கு என்னென்ன மலர்கள் பிரியமானவை என்பது பற்றியும் அதை அணிவிப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் அப்பைய தீட்சிதர் என்ற தீவிர சிவபக்தர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் எழுதியுள்ளார் .. அந்த ஸ்லோகத்தின் பொருள் - பரமேஸ்வரா ! உன்மேல் எருக்கையும் .. த்ரோணம் என்னும் தும்பை மலரையும் அர்ச்சனை செய்தாலே போதும் அது ஒருவனுக்கு மோட்ச சாம்ராஜ்யத்தை என்னும் பேரின்ப வீட்டைத் தந்துவிடுகிறது என்பதாகும் .. எருக்கை .. தும்பை மலர்கள் பெண்கள் சூடாதவை .. எல்லாராலும் ஒதுக்கப்படுபவை .. விநாயகருக்கு மட்டுமல்ல சிவனுக்கும் எருக்கு உகந்ததாகிறது .. இனி சிவனுக்கு வில்வமாலையுடன் எருக்கம் மலர்களையும் அர்ச்சனைக்கு எடுத்துச் செல்லலாம் .. இந்த மலர்களை சிவலிங்கத்தின்மீது அர்ச்சனை செய்து அதையே பிரசாதமாகப் பெற்றுவந்து நம் பூஜை அறையில் வைத்துவிட்டால் இறைவனின் தன்மையே நமக்கும் வந்துவிடும் .. காஞ்சிப்பெரியார் சொல்லும் தகவல் இது .. சிவனைப்போற்றுவோம் அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் .. “ ஓம் சிவாய நமஹ “ .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY WITH THE DIVINE BLESSINGS OF LORD SHIVA .. MAY HE BLESS YOU WITH HAPPINESS AND PROSPERITY .. " OM SIVAAYA NAMAHA "

No comments:

Post a Comment