சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்கள் அனைவரது இல்லம் தேடி அன்னை வந்து சகல சௌபாக்கியங்களையும் அளித்து தங்கள் துயர்களைந்து அருள்பாலிப்பாளாக .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

திருப்பாற்கடலில் தோன்றியவள் .. சகல செல்வங்களுக்கும் 
அதிபதியானவள் .. சர்வமங்களங்களையும்அள்ளித் தருபவள் 
அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத் தேனை அளிப்பவள் .. ஆயிரம் இதழ்கொண்ட தாமரைமலரில் வாசம் செய்பவள் .. பள்ளிகொண்ட பரந்தாமனின் திருமார்பினை அணைந்தவள் .. வழிபடும் அன்பர்களின் துன்பங்களையும் .. துயர்களையும் தொலைத்து அழிப்பவள் .. அவளே அன்னை ! அவளே மஹாலக்ஷ்மி ! 

அன்னையிடம் சரணடைந்து .. ஆத்மஹோமம் .. பூஜா .. மந்திரங்களுடன் .. தொடர்ந்து தியானம் செய்பவர்கள் .. நிச்சயம் தெய்வீகக் குழந்தையாக மாறுவது நிஜமே ! 
உலகை ஆளும் ஜகன்மாதாவின் குழந்தைகள் வாழ்க்கையில் சர்வசக்திகளும் நிறைந்து ஆனந்தம் பெறுவார்கள் .. தூய்மையும் .. ஒளியும் பொருந்திய இடங்களில் வீற்றிருப்பவள் மஹாலக்ஷ்மி .. மனிதர்களும் அகத்தூய்மை .. புறத்தூய்மையுடன் இருக்க அவர்களின் அகத்தினுள்ளும் இறைவனுடன் அம்பாள் வீற்றிருப்பாள் ..

அன்னையைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி பெற்று ஆனந்தமாக வாழ்வோமாக .. 
“ ஓம் மஹாலக்ஷ்மியே ! நமோஸ்துதே ! .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY GODDESS LAKSHMI SHOWER HER DIVINE BLESSINGS ON YOU WITH GOOD HEALTH .. GOOD WEALTH .. HAPPINESS ..AND GOOD FORTUNE .. 
" JAI MATA DI " ..


Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

No comments:

Post a Comment