சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று சஷ்டித் திதியும் கூடிவருவதால் முருகனாலயம் சென்று முருகனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது 
இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. சகல ஐஸ்வர்யங்களும் பெற்று மனநலமும் .. உடல்நலமும் .. நலமுடன் திகழ முருகப்பெருமானை மனதாரத் துதிக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !

தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

வந்தவினையும் .. வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்குமே ! செந்தி நகர்ச் சேவகா ! நின்றன் திருநீறு அணிவார்க்கு வாராதே வினை !! 

முருகனுக்குரிய எண் ஆறு ! சரவணபவ ! என்றழைக்கப்படும் முருகனுக்குரிய மூலமந்திரத்தின் எழுத்துக்களும் ஆறு ! முருகனின் திருவுருவம் தமிழ்மொழியையே பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது ..கந்தனின் 18 கண்கள் 
(ஒவ்வொரு முகத்திலும் சிவபெருமானைப் போன்றே மூன்று கண்கள்) பதினெட்டு மெய்யெழுத்துக்களையும் .. பன்னிரு கரங்கள் பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களையும் குறிப்பதாக அமைந்துள்ளன .. 

மேலும் தமிழ்மொழியின் மிகச்சிறப்பான எழுத்தாகத் திகழும் ஆயுத எழுத்து முருகனின் கையில் உள்ள வேலாயுதத்தைக் குறிப்பது .. இன எழுத்துக்களான வல்லின .. மெல்லின .. இடையின எழுத்துக்களில் ஒவ்வொன்றான 
மு .. ரு .. க .. ஆகிய மூன்றும் சேர்ந்து அவனது பெயராக அமைந்தது .. 

முருகனை நாம் நம்பிக்கையுடன் வணங்கிட புனித கங்கை போன்று ஆறாக அருள்மழைபெய்து அவகுணங்களை அடியோடு அழித்து ஞானானந்த பிரகாசத்தில் நம்மை ஆழ்த்தி 
முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்வோம் .. குகமயமாக ஆவோம் ! சர்வ குகமயம் ஜகத் !! 

WISH YOU ALL A VERY HAPPY SATURDAY MORNING .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER HIS CHOICEST BLESSINGS WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM MURUGA " .
.


Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

No comments:

Post a Comment