சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஞாயிற்றுக்கிழமையான இன்று பூமியில் சூரியனாதிக்கம் நிறைந்த நாளாகும் .. தங்களனைவரது சகல கிரகதோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெற சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூரியஹ் ப்ரசோதயாத் !! 

சூரியன் என்றாலே வெளிச்சம் என்று பொருள் .. செம்பருத்தியின் சிவந்த நிறமுடையவர் .. பிரகாசமான இவர் 
இருட்டின் பகைவன் எனப் போற்றப்படுகிறார் ..

ஒற்றைச்சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகப் பூட்டிவரும் சுடர்க்கடவுள் ஆவார் ..
வேதமந்திரங்களின் தலைசிறந்த காயத்ரி மந்திரத்துக்கு உரியவர் சூரியன் .. சூரியநமஸ்காரம் என்று தினமும் அவரை வழிபடுகிறோம் .. அவ்வாறு செய்வதால் பலமும் .. ஆத்மபலமும் அடையலாம் .. 

சுயநிலை .. கௌரவம் .. ஆற்றல் .. வீரம் .. பராகிரமம் .. சரீரசுகம் .. நன்நடத்தை .. நேத்திரம் .. உஷ்ணம் .. ஒளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரகன் சூரியனே ! 

சூரியனைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் திருவருளையும் பெறுவோமாக !
ஓம் சூரியபகவானே நமோஸ்துதே ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH STRENGTH .. GOOD HEALTH AND HAPPINESS..
" JAI SURYA DEV " ..
Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

No comments:

Post a Comment