SWAMIYE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ...
செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த இந்நாளில் .. செவ்வாய்க்கு 
அதிபதியாகிய முருகப்பெருமானைத் துதித்து .. தங்களனைவருக்கும் உடல்நலமும் .. மனநலமும் .. நலமுடன்
திகழவும் .. சகல ஐஸ்வர்யங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமணய ப்ரசோதயாத் !! .. 

மலையேறிவந்து தன்னைத் தரிசிப்பவர்களுக்கு வாழ்வின் உச்சியை அடைந்து .. எப்போதும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டவனே ! குமரனே ! 

முருகனை நம்பிக்கையுடன் வணங்கிட .. புனித கங்கை போன்று ஆறாக அருள்மழைபெய்து .. அவகுணங்களை அடியோடு அழித்து .. ஞானானந்த பிரகாசத்தில் ஆழ்த்தி .. முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்ந்து .... 
“ ஸர்வம் குஹமயம் ஜகத் “ என வழிபடவேண்டும் .. 

முருகனைப்போற்றுவோம் ! சகல நன்மைகளையும் பெற்றிடுவோம் ! ” ஓம் சரவணபவாய நமஹ “ .. 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. 
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM MURUGA "

SWAMYE SARANAM IYYAPPA....PANVEL BALAGANE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM.....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
திங்கட்கிழமையாகிய இன்று சோமவாரவிரதமும் .. பிரதோஷமும் சேர்ந்து வருவதால் சிவாலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றியளிக்கவும் சிவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !

தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! .. 

பிரதோஷவிரதமாகிய இன்று மாலை (4.30 - 6.30 பிரதோஷவேளையில்) சிவாலயம் சென்று விளக்கேற்றி ஈசனைப் பிறையணிந்த பெருமானாக .. தேவியோடும் .. முருகனோடும் .. சோமஸ்கந்தமூர்த்தியாக நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையில் நடக்கும் அபிஷேகத்தைக் கண்டு தரிசித்தால் வேறுபுண்ணியம் வேண்டியதில்லை .. அனைத்து துன்பங்களும் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை .. 

” சிவாய நம “ என்று சிந்தித்திருப்போர்க்கு .. அபாயம் ஒருநாளும் இல்லை “ ..

சிவனைப்போற்றுவோம் ! வாழ்வில் அனைத்து நலங்களையும் பெற்றிடுவோம் ! “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY .. AND MAY LORD SHIVA BLESS YOU WITH HAPPINESS AND GOOD FORTUNE .. AND PROSPERITY .. 
" OM NAMASHIVAAYA " .
.



















SWAMY SARANAM...PANVEL BALAGANEN SARANAM IYYAPPA! GURUVE SARANAM!!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! ..

சிவபெருமான் அன்பிற்கு அடிபணிவான் .. செருக்குற்றவரைச் சீறி அழிப்பான் .. அடியவரைக் காக்கும் பொருட்டு எதனையும் செய்யும் அருள்மிக்கவன் .. இருபது தோள்களை உடைய சிவபக்தன் .. இசைக்கலைஞன் .. தன் இசைத்திறத்தால் இறைவனையே தன்வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவன் .. அப்படிப்பட்ட இராவணனும் செருக்குற்றபோது இறைவன் அவனைத் தண்டித்தான் .. 

அடியும் .. முடியும் காணமாட்டாது அரற்றிய திருமாலும் .. பிரம்மனும் .. சிவன்பெருமை உணர்ந்து அவனை மகிழ்ந்தேத்தினர் .. காலம் தவறாது உயிர்களைக்கொள்ளும் எமன் மார்க்கண்டேயரின் உயிரை எடுக்க முற்பட்டான் .. தன்னையே சரண் அடைந்த மார்க்கண்டேயனுக்காக எமனையே உதைத்த கால்களை உடையவன் சிவனே ! .. 

” சிவாயநமஹ ! எனச்சொல்லி நம் சிறுமனதை சிதறாமல் கட்டி
சிவனருளே ! எல்லாமென சிந்தையில் வைத்து சிவனே ! உன் அருளுக்காய் தவமிருப்போம் ! சிவசிவா ! நம்முள்ளே கலந்தருள்வாயாக “ .. 

வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS ..
GOOD HEALTH .. GOOD FORTUNE & PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .

108 - திவ்ய தேசங்கள்



பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்த த்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலமே திவ்ய தேசம் என்று அழைக்கப்படுகிறது. இப்படிப் புகழ்பெற்ற திருத்தலங்கள் 108, அஃதே 108 திவ்ய தேசங்கள்
எனப்படுகிறது. இனி 108 திவ்ய தேசங்களையும் அந்த திவ்ய தேசங்களின் தாயார் யார், பெருமாள் யார், அந்த தலம் எந்த மண்டலத்தில் இருக்கிறது, எந்த நகருக்கருகில் இருக்கிறது போன்ற விவரங்களை இந்த பட்டியலில் காணலாம்.

1-ஸ்ரீரங்கம்
(திருவரங்கம்)
ஸ்ரீரங்க நாச்சியார்
ஸ்ரீ ரங்கநாதன்
நம்பெருமாள்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

2-திருக்கோழி
(உறையூர், நிசுலாபுரி, உரந்தை)
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ அழகிய மணவாளன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

3-திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கடம்ப க்ஷேத்ரம்)
ஸ்ரீ பூர்வ தேவி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

4-திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்)
ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்
ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

5-திருஅன்பில்
ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்
ஸ்ரீ வடிவழகிய நம்பி
ஸ்ரீ சுந்தரராஜன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

6-திருப்பேர்நகர் ,அப்பக்குடத்தான்
ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)
அப்பலா ரங்கநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

7-திருக்கண்டியூர்
ஸ்ரீ கமலவல்லி
ஹர சாப விமோசன பெருமாள்
கமலநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

8 -திருக்கூடலூர்,
ஆடுதுறை பெருமாள் கோவில்
ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)
வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)
சோழ நாடு,கும்பகோணம்

9-திரு கவித்தலம் (கபிஸ்தலம்)
ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)
கஜேந்திர வரதன்
சோழ நாடு,கும்பகோணம்

10-திருப்புள்ளம் (பூதங்குடி)
ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
ஸ்ரீ வல்விலி ராமர்
சோழ நாடு,கும்பகோணம்

11-திரு ஆதனூர்
ஸ்ரீ ரங்கநாயகி
ஸ்ரீ ஆண்டளக்குமையன்
சோழ நாடு,கும்பகோணம்

12-திருகுடந்தை
(பாஸ்கர க்ஷேத்ரம்)
ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)
ஸ்ரீ சாரங்கபாணி
சோழ நாடு,கும்பகோணம்

13-திருவிண்ணகர்,
ஒப்பிலியப்பன் கோயில்
ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்
ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)
சோழ நாடு,கும்பகோணம்

14-திரு நறையூர்,
நாச்சியார் கோயில்
ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்
திருநறையூர் நம்பி
சோழ நாடு,கும்பகோணம்

15-திருச்சேறை
ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)
ஸ்ரீ சாரநாதன்
சோழ நாடு,கும்பகோணம்

16-திரு கண்ணமங்கை
ஸ்ரீ அபிசேக வல்லி
பக்த வத்சல பெருமாள்
சோழ நாடு,கும்பகோணம்

17-திருக்கண்ணபுரம்(கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)
ஸ்ரீ கண்ணபுர நாயகி
நீல மேகப் பெருமாள்
சௌரிராஜ பெருமாள்
சோழ நாடு,நாகப்பட்டினம்

18-திரு கண்ணங்குடி
ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)
ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்)
தாமோதர நாராயணன்
சோழ நாடு,கும்பகோணம்

19-திரு நாகை,
நாகப்பட்டினம்
ஸ்ரீ சௌந்தர்ய வல்லி
நீலமேகப் பெருமாள்
சௌந்தர்யராஜன்
சோழ நாடு,நாகப்பட்டினம்

20-தஞ்சைமாமணி கோயில்
ஸ்ரீ செங்கமல வல்லி
நீலமேகப் பெருமாள்
சோழ நாடு,தஞ்சாவூர்

21-திரு நந்திபுர விண்ணகரம்,
நாதன் கோயில், தக்ஷின ஜகன்னாத்
ஸ்ரீ செண்பக வல்லி தாயார்
ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்)
சோழ நாடு,கும்பகோணம்

22-திரு வெள்ளியங்குடி
ஸ்ரீ மரகத வல்லி
கோலவல்வில்லி ராமன்
ஸ்ருங்கார சுந்தரன்
சோழ நாடு,சீர்காழி

23-திருவழுந்தூர்
(தேரழுந்தூர்)
ஸ்ரீ செங்கமல வல்லி
தேவாதிராஜன்
ஆமருவியப்பன்
சோழ நாடு,மயிலாடுதுறை

24-திரு சிறுபுலியூர்
ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்)
க்ருபா சமுத்ரப் பெருமாள்
சோழ நாடு,மயிலாடுதுறை

25-திரு தலைச் சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)
ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்
நாண்மதியப் பெருமாள் (வெண்சுடர் பெருமாள்)
வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

26-திரு இந்தளூர்
ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி)
பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

27-திருக் காவளம்பாடி,
திரு நாங்கூர்
ஸ்ரீ மடவரல் மங்கை
ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)
சோழ நாடு,சீர்காழி

28-திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம்,சிர்காழி
ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)
திரு விக்ரமன் (தாடாளன்)
த்ரிவிக்ரம நாராயணன்
சோழ நாடு,சீர்காழி

29-திரு அரிமேய விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அம்ருதகட வல்லி
குடமாடுகூத்தன்
சதுர்புஜங்களுடன் கோபாலன்
சோழ நாடு,சீர்காழி

30-திருவண் புருடோத்தமம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புருஷோத்தம நாயகி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,சீர்காழி

31-திரு செம்பொன்செய் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்
ஸ்ரீ பேரருளாளன்
ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

32-திருமணிமாடக் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு)
நாராயணன், அளத்தற்கரியான்
சோழ நாடு,சீர்காழி

33-திரு வைகுந்த விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ வைகுந்த வல்லி
ஸ்ரீ வைகுந்த நாதன்
சோழ நாடு,சீர்காழி

34-திருவாலி மற்றும் திருநகரி
திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன்
திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
சோழ நாடு,சீர்காழி

35-திரு தேவனார் தொகை,
திரு நாங்கூர்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி
தெய்வநாயகன்
மாதவப் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

36-திருத்தெற்றி அம்பலம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ செங்கமல வல்லி
செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்)

சோழ நாடு,சீர்காழி

37-திருமணிக்கூடம் ,
திரு நாங்கூர்
ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்)
சோழ நாடு,சீர்காழி

38-அண்ணன் கோயில்(திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர்
ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

39-திரு பார்த்தன் பள்ளி,
திரு நாங்கூர்
ஸ்ரீ தாமரை நாயகி
ஸ்ரீ தாமரையாள் கேள்வன்
ஸ்ரீ பார்த்தசாரதி
சோழ நாடு,சீர்காழி

40-திருச்சித்திரக் கூடம் ,
சிதம்பரம்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
கோவிந்தராஜன்
தேவாதி தேவன் (பார்த்தசாரதி)
சோழ நாடு, சிதம்பரம்

41-திரு அஹீந்த்ரபுரம்,
ஆயிந்தை
ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி)
ஸ்ரீ தெய்வநாயகன்
ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன்
நாடு நாடு,கடலூர்

42-திருக்கோவலூர்
ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்
த்ரிவிக்ரமன்
ஆயனார், கோவலன் (கோபாலன்)
நாடு நாடு,கடலூர்

43-திருக்கச்சி,
அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்)
ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார்
ஸ்ரீ பேரருளாள வரதராஜன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

44-அஷ்டபுயகரம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்
ஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

45-திருத்தண்கா,
தூப்புல், காஞ்சிபுரம்
ஸ்ரீ மரகத வல்லி
ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

46-திரு வேளுக்கை,
காஞ்சிபுரம்
ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)
அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

47-திரு நீரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ நிலமங்கை வல்லி
ஸ்ரீ ஜகதீச்வரர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

48-திருப் பாடகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா
பாண்டவ தூதர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

49-திரு நிலா திங்கள் துண்டம்,காஞ்சிபுரம்
நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

50-திரு ஊரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி)
ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

51-திரு வெஃகா,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
ஸ்ரீ யதோக்தகாரி (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்)
தொண்டை நாடு.காஞ்சிபுரம்

52-திருக் காரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)
ஸ்ரீ கருணாகர பெருமாள்
தொண்டை நாடு, காஞ்சிபுரம்

53-திருக் கார்வானம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)
ஸ்ரீ கள்வன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

54-திருக் கள்வனூர்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்
ஆதி வராஹப் பெருமாள்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

55-திருப் பவளவண்ணம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பவள வல்லி
ஸ்ரீ பவளவண்ணன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

56-திருப் பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
ஸ்ரீ வைகுண்ட வல்லி
ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

57-திருப்புட்குழி
ஸ்ரீ மரகத வல்லி தாயார்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
காஞ்சிபுரம்

58-திரு நின்றவூர்
(தின்னனூர்)
ஸ்ரீ சுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்)
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)

தொண்டை நாடு
சென்னை

59-திரு எவ்வுள்
(புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர்
ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)
வைத்ய வீர ராகவப் பெருமாள்

தொண்டை நாடு
சென்னை

60-திரு அல்லிக் கேணி(திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)
ஸ்ரீ ருக்மிணித் தாயார்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
ஸ்ரீ பார்த்தசாரதி
தொண்டை நாடு
சென்னை

61-திரு நீர்மலை
ஸ்ரீ அணிமாமலர் மங்கை
நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)

தொண்டை நாடு
சென்னை

62-திரு இட வெந்தை
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
லக்ஷ்மி வராஹப் பெருமாள்
நித்ய கல்யாணப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

63-திருக் கடல் மல்லை,
மஹாபலிபுரம்
ஸ்ரீ நில மங்கை நாயகி
ஸ்தல சயனப் பெருமாள்
ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்)
தொண்டை நாடு
சென்னை

64-திருக்கடிகை,
சோளிங்கர்
ஸ்ரீ அம்ருத வல்லி
யோக ந்ருஸிம்ஹன்
அக்காரக்கனி
தொண்டை நாடு
சென்னை

65-திரு அயோத்தி,
அயோத்யா
ஸ்ரீ சீதாப் பிராட்டி
ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)

வட நாடு
உத்தர் பிரதேஷ்

66-திரு நைமிசாரண்யம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி)
ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)

வட நாடு
உத்தர் பிரதேஷ்

67-திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக்,
(ஜோஷி மடம்)
ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
பரம புருஷன்

வட நாடு
உத்தராஞ்சல்

68-திருக் கண்டமென்னும் கடிநகர்(தேவப்ரயாகை)
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்)

வட நாடு
உத்தராஞ்சல்

69-திரு வதரி ஆசிரமம்
(பத்ரிநாத்)
ஸ்ரீ அரவிந்த வல்லி
ஸ்ரீ பத்ரி நாராயணன்

வட நாடு
உத்தராஞ்சல்

70-திரு சாளக்ராமம்
(முக்திநாத்)
ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார்
ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி

வட நாடு
நேபால்

71-திரு வட மதுரை
(மதுரா)
ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)

வட நாடு
உத்தர் பிரதேஷ்

72-திருவாய்ப்பாடி,
கோகுலம்
ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா
ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன்

வட நாடு
உத்தர் பிரதேஷ்

73-திரு த்வாரகை
(துவரை, துவராபதி)
ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி)
கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி)

வட நாடு
குஜராத்

74-திரு சிங்கவேழ்குன்றம்,அஹோபிலம்
ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)
ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்)

வட நாடு
ஆந்திரம்

75-திருவேங்கடம்
(திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)
அலர்மேல் மங்கை (பத்மாவதி)
ஸ்ரீ திருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி)
ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்)
வட நாடு
ஆந்திரம்

76-திரு நாவாய்
ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)
நாவாய் முகுந்தன் (நாராயணன்)

மலை நாடு
கேரளம்

77-திரு வித்துவக்கோடு(திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)
ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)
உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்)

மலை நாடு
கேரளம்

78-திருக்காட்கரை
ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)
காட்கரையப்பன்

மலை நாடு
கேரளம்

79-திரு மூழிக்களம்
ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
திரு மூழிக்களத்தான் (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்)

மலை நாடு
கேரளம்

80-திரு வல்ல வாழ்
(திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்)
ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்
ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்)

மலை நாடு
கேரளம்

81-திருக்கடித்தானம்
ஸ்ரீ கற்பக வல்லி
ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்

மலை நாடு
கேரளம்

82-திருச்செங்குன்றூர்
(திருசிற்றாறு)
ஸ்ரீ செங்கமல வல்லி
இமயவரப்பன்

மலை நாடு
கேரளம்

83-திருப்புலியூர்
(குட்டநாடு)
ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
மாயப்பிரான்

மலை நாடு
கேரளம்

84-திருவாறன்விளை
(ஆறன்முளா)
ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்
திருக்குறளப்பன் (செஷாசனா )

மலை நாடு
கேரளம்

85-திருவண் வண்டுர்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
பாம்பணை அப்பன்

மலை நாடு
கேரளம்

86-திருவனந்தபுரம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
அனந்தபத்மநாபன்

மலை நாடு
கேரளம்

87-திரு வட்டாறு
ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
ஆதி கேசவ பெருமாள்

மலை நாடு
கேரளம்

88-திருவண்பரிசாரம்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்)
மலை நாடு,கேரளம்

89-திருக்குறுங்குடி
ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்
சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)
பாண்டியநாடு,திருநெல்வேலி

90-திரு சிரீவர மங்கை(வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி)
ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார்
ஸ்ரீ தோதாத்ரிநாதன் (வானமாமலை)
ஸ்ரீ தெய்வநாயகன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

91-ஸ்ரீவைகுண்டம்,
நவதிருப்பதி
ஸ்ரீ வைகுந்தவல்லி
ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

92-திருவரகுணமங்கை,
நவதிருப்பதி
ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்)
விஜயாசனப் பெருமாள்
பாண்டியநாடு,திருநெல்வேலி

93-திருப்புளிங்குடி,
நவதிருப்பதி
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி
ஸ்ரீ காய்சினவேந்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

94-திரு தொலைவில்லிமங்கலம்(ரெட்டைத்திருப்பதி), நவதிருப்பதி
ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

95-திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி
ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி
ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
ஸ்ரீ மாயக்கூத்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

96-திருக்கோளூர், நவதிருப்பதி
ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்
ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

97-திருப்பேரை
(தென் திருப்பேரை), நவதிருப்பதி
ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

98-திருக்குருகூர்
(ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி
ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
பாண்டியநாடு,திருநெல்வேலி

99-ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
பாண்டியநாடு,விருதுநகர்

100-திருதண்கால் (திருதண்காலூர்)
ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
ஸ்ரீ நின்ற நாராயணன்
பாண்டியநாடு,விருதுநகர்

101-திருக்கூடல்,
மதுரை
ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
கூடல் அழகர்
பாண்டியநாடு,மதுரை

102-திருமாலிரும் சோலை
(அழகர் கோயில்)
ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)
திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)
பாண்டியநாடு,மதுரை

103-திரு மோகூர்
ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)
ஸ்ரீ காளமேக பெருமாள்
ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்
பாண்டியநாடு,மதுரை

104-திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)
திருமாமகள் நாச்சியார்
ஸ்ரீ உரகமெல்லணையான்
ஸ்ரீ சௌம்யநாராயணன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

105-திருப்புல்லாணி, ராமநாதபுரம்
ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார்
ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்)
பாண்டியநாடு,ராமநாதபுரம்

106-திருமெய்யம்
ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி)
ஸ்ரீ மெய்யப்பன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

107-திருப்பாற்கடல்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி)
ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்
விண்ணுலகம்

108-பரமபதம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பரமபத நாதன்
விண்ணுலகம்

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று .. ஹரிஹர ப்ரஹ்மாதி தேவர்களாலும் சேவித்து வணங்கப்படுகின்ற அன்னையாகிய மஹாலக்ஷ்மியைத் துதித்து .. அன்னையின் அருட்கடாக்ஷ்மும் .. திருவருளும் கிடைத்து .. சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

மஹாலக்ஷ்மி எப்போதும் உறையும் இடமாக மஞ்சள் .. குங்குமம் .. கண்ணாடி .. சீப்பு .. பழவகைகள் .. தேங்காய் .. வெற்றிலை .. பாக்கு .. ஆகியன விளங்குகின்றன .. 
அவள் நிதர்சனமானவள் .. நித்யசுமங்கலி .. அண்டபிரபஞ்சம் எங்கிலும் வியாபித்திருப்பவள் .. 

அழகு .. மனோதைரியம் .. வேலைத்திறன் .. தருமசிந்தனை மிக்கவர்கள் .. பெரியவர்களுக்குப் பணிவிடை செய்பவர்கள் .. ஆகியோரிடையே ஆண் .. பெண் .. வித்தியாசம் பாராமல் இருக்கின்றாள் .. 

அன்னையைப் போற்றுவோம் ! அவள் மங்களங்கள் யாவும் தந்து .. நித்யவாசம் செய்து தங்களனைவரையும் மகிழ்விப்பாளாக ! .. ” ஓம் மஹாலக்ஷ்மியே ! நமோஸ்துதே ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DEVOTIONAL FRIDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI .. MAY SHE SHOWER YOU WITH GOOD HEALTH .. GOOD WEALTH AND GOOD FORTUNE .. " JAI MATA DI " .

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்... அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர் மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை. பரணி - முக்கிய ஸ்தலம் - நல்லாடை மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம். கார்த்திகை - முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம் மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர். ரோஹிணி - முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி. மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம் - எண்கண் மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை. திருவாதிரை - முக்கிய ஸ்தலம் - சேங்காலிபுரம் மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம். புனர்பூசம் - முக்கிய ஸ்தலம் - சீர்காழி மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர். பூசம் - முக்கிய ஸ்தலம் - திருச்சேறை மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில். ஆயில்யம் - முக்கிய ஸ்தலம் - திருப்புறம்பியம் மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை. மகம் - முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு. பூரம் - முக்கிய ஸ்தலம் - தலைசங்காடு மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம். உத்திரம் - முக்கிய ஸ்தலம் - கரவீரம் மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம். ஹஸ்தம் - முக்கிய ஸ்தலம் - கோமல் மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு. சித்திரை - முக்கிய ஸ்தலம் - திருவையாறு மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு. சுவாதி - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர் மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம். விசாகம் - முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம் மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம். அனுஷம் - முக்கிய ஸ்தலம் - நாச்சியார் கோயில் மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர். கேட்டை - முக்கிய ஸ்தலம் - வழுவூர் மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை. மூலம் - முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறை மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு. பூராடம் - முக்கிய ஸ்தலம் - கடுவெளி மற்ற தலங்கள் - நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம். உத்திராடம் - முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர் மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம். திருவோணம் - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர். மற்ற தலங்கள் - ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல். அவிட்டம் - முக்கிய ஸ்தலம் - திருபூந்துருத்தி மற்ற தலங்கள் - விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி. சதயம் - முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர் மற்ற தலங்கள் - கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை. பூரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருக்குவளை மற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம். உத்திரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருநாங்கூர். மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில். ரேவதி - முக்கிய ஸ்தலம் - இலுப்பைப்பட்டு மற்ற தலங்கள் - காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.

SWAMI SARANAM....PANVEL BALAGANE SARANAM IYYAPPA....GURUVIN PADHARAVINDHANGALE SARANAM IYYAPPA


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் குருநாதர் ஷீரடிபாபாவுக்கு உகந்த நாளும் ஆகும் 
அவர் பாதம் பணிந்து தங்களனைவருக்கும் பாபாவின் அன்பும் அருட்கடாக்ஷ்மும் கிடைத்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷீரடிவாஸாய வித்மஹே !
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !! 

ஷீரடிபாபாவின் அமுதமொழிகளில் சில -

1 - நீ எப்போதும் வாய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும் .. நீ அளித்த வாக்குறுதிகள் யாவற்றையும் நிறைவேற்றவேண்டும் 
விசுவாசமும் .. பொறுமையும் பெற்றிடு .. நீ எங்கிருந்தாலும் எல்லாநேரங்களிலும் அப்போது நான் உன்னுடனேயே இருப்பேன் .. (ஷீரடி) 

2 - யோகசாதனைகள் ஏதும் தேவையில்லை .. ஆறுசாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை ..
காப்பவரும் .. அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் .. விசுவாசமும் இருந்தால் போதும் (ஷீரடி) .. 

3 - உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ ..
மனிதனோ .. பறவையோ .. மிருகமோ .. புழுபூச்சியோ .. அதுவே அதிதி .. இவையாவும் உணவை நாடுகின்றன .. 
உன்னிடம் வரும் உண்மையான அதிதியை நீ அதிதியாகக் கருதுவதில்லை .. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில் சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டுபோய் வீட்டுக்கு வெளியே வை ..
எந்தப்பிராணியையும் விரட்டாதே ! எந்தப்பிராணி உணவு கொள்ளவந்தாலும் .. அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே!
இவ்வாறாக இலட்சம் விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய் .. பசியால்வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக ! (ஷீரடி) 

அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர் !
தியான ஸ்வரூபி ! அவரே பிரம்மா ! விஷ்ணு ! பரமேஸ்வரன்!
அப்படிப்பட்ட சாயிநாதரை நமஸ்காரம் செய்து நாம் வழிபடுவோமாக .. “ ஸச்சிதானந்த ஸமாத்த ஸத்குரு சாயிநாத் மஹராஜ் கீ ! ஜெய் ! 
” ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS .. GOOD HEALTH AND PROSPERITY .. " OM SAI RAM " ..

PANVEL BALAGAN PATHAMPOTRI.....SWAMIYE SARANAM IYYAPPA,......GURUVE SARANAM SARANAM....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆனிமாத உத்திர நட்சத்திரமாகிய இன்று நடராஜப்பெருமானுக்கு சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் .. அலங்காரமும் நடைபெறுகிறது .. இதனை 
” ஆனித்திருமஞ்சனம் “ என்பர் .. மஞ்சனம் என்றால் நீராடல் என்று பொருள் .. சிவாலயம் சென்று நடராஜப் பெருமானையும் சிவகாமியம்மனையும் தரிசிப்பது சாலச்சிறந்தது .. 
தங்களனைவருக்கும் சகலசம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு .. 
ஒன்று - மார்கழித் திருவாதிரை .. 
மற்றொன்று - ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம் .. இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும் .. (சூரியன் உதிக்கும் முன் )
அபிஷேகத்திற்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும் .. உச்சிவேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார் ..அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பார் .. பின் மகாதீபாராதனை நடக்கும் .. அன்றிரவே கொடி இறக்கப்படும் ..
நடராஜரின் திருப்பாதங்களில் வேதங்கள் சிலம்பாக ஒலிக்கிறது .. வலக்கை டமருகம் இசைக்கிறது .. இடக்கை அக்னியைத் தாங்கியிருக்கிறது ..அவரின் சிவந்த இதழ்கள் புன்முறுவலைக் காட்டுகின்றது .. பால்போல வெண்ணீறு காற்றில் நறுமணம் பரப்புகிறது .. செஞ்சடை எட்டுதிக்குகளிலும் விரித்தாடுகிறது .. வலக்கால் அசுரனை மிதித்து நிற்கிறது .. இடக்கால் குஞ்சித பாதமாக 
(தொங்கிய நிலையில்) நமக்கு அருள்செய்கிறது .. இதயம் என்னும் கோயிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார் ..
இதைக்கண்டு தரிசித்தால் வாழ்வில் எப்போதும் நமக்கு ஆனந்தமே ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! நலமுடனும் !
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY TOO .. MAY LORD SHIVA SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " ..
Like · Comment · 

தில ஹோமம் என்றால் என்ன? அதை எப்போது யார் செய்யலாம்? தில ஹோமம் என்பது கறுப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம், இது பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மரித்த முன்னோர்கள் நல்ல கதி அடையவும் செய்யப்படுகிறது. மேலும் மரித்தவர்களுக்கு முறையாக கர்மாக்கள் செய்யாமல் இருத்தல், செய்த கர்மாக்களும் (நியமனங்களை கடைபிடிக்காததால் ஏற்பட்ட) தோஷத்துடன் இருத்தல், ஆக்ஸிடென்ட் போன்ற செயற்கை மரணத்தால் மரித்தவர்களுக்கு கர்மாக்களால் (தக்க பரிஹாரம் செய்யாததால்) த்ருப்தி ஏற்படாமல் பித்ருக்களாக மாற இயலாமல் தவித்தல், வருஷா வருஷம் முறையாக ச்ராத்தம் செய்யாமல் இருத்தல், செய்யும் ச்ராத்தத்தை முறை தவறி செய்தல் போன்ற செயல்களால் ஏற்படும் பித்ரு தோஷம் ஆகியவை இந்த தில ஹோமத்தால் விலகும், மேலும் மேற்கூறிய பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல், பிறந்த குழந்தை மரித்தல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம், இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்பட வேண்டும். மற்ற ஹோமங்களைப் போலல்லாமல் மரித்தவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்வதைப்போல் இறந்தவர்களை வெள்ளியாலான பிரதிமையில் ப்ரேத ஸ்வரூபியாக ஆவாஹனம் செய்து, செய்யப்பட வேண்டிய இந்த தில ஹோமத்தை, தாங்கள் வசிக்கும் வீட்டில் செய்வதில்லை, ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம், பவானி, ஸ்ரீரங்க பட்டினம் போன்ற புண்ணிய க்ஷேத்ரங்களில் பஜனை மடம் போன்ற பொதுவான இடங்களில் செய்யவேண்டும், ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு ப்ரதிமைகளை ஸமுத்ரத்திலோ அல்லது கடலில் கலக்கும் புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு ஸ்னானம் செய்ய வேண்டும், இதனால் பித்ரு தோஷம் விலகி, காலத்தில் குழந்தைகள் பிறந்து, தீர்காயுஸ்ஸுடன் வாழ்வார்கள். கிருஷ்ண பக்ஷம் சனிக்கிழமை அமாவாஸை பரணீ நக்ஷத்ரம் குளிகன் இருக்கும் ராசி ஆகிய நாட்கள் திலஹோமத்துக்குச் சிறந்தவை, மேலும் தனக்கு சொந்தமான (ஔபாஸன) அக்னியில் தனது வீட்டிலேயே காயத்ரீ மந்த்ரம் சொல்லியும் தில ஹோமம் செய்யலாம், இதுவும் அனைத்து பாபத்தையும் போக்கும், தில ஹோமம் செய்து பித்ரு தோஷம் விலகிய பின்னர் அமாவாஸை போன்ற நாட்களில் தர்ப்பணமும் பெற்றோருக்கு வருஷா வருஷம் ச்ராத்தம் ஆகியவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும், அப்போதுதான் செய்த தில ஹோமம் முழுமையான பலனைத் தரும். ஆனாலும் இப்படிப்பட்ட தில ஹோமத்தை தேவையில்லாமல் செய்யக்கூடாது, தேவையான வியாதியுள்ளவர்கள் மட்டுமே மருந்தை சாப்பிடுவதைப்போல் யாருக்குத் தேவையோ அவர்கள்தான் தில ஹோமத்தைச் செய்ய வேண்டும்., தில ஹோமம் செய்ய வேண்டியத் தேவை உள்ளதா? என்பதை தக்க நபரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும், குறிப்பாக ஜாதகம் மூலம் பித்ரு தோஷம் இருப்பதை உறுதி செய்த பின்னரே தில ஹோமம் செய்ய வேண்டும், அதாவது ஜன்ம லக்னத்திலிருந்து புத்ர ஸ்தானத்தில் (ஐந்தாமிடத்தில்) சனி இருந்தாலோ அல்லது ஐந்தாமிடத்துக்கு சனி பார்வை இருந்தாலோ, புத்ர காரகனான குருவுக்கு சனியின் சேர்க்கை - பார்வை - இருந்தாலோ குழந்தை பாக்யம் இருக்காது, அல்லது குழந்தைகள் தங்காது, இது பித்ரு தோஷத்தால் ஏற்படுகிறது என்பதால் இப்படிப்பட்ட பித்ரு தோஷத்துக்கு தில ஹோமத்தைத் தவிர மற்ற பரிஹாரம் கிடையாது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் தில ஹோமம் செய்யலாம், மற்ற ஸாதாரண தோஷங்களுக்கு தில ஹோமம் செய்ய வேண்டாம், மற்ற தேவையான பரிஹாரங்களைச் செய்தாலே போதுமானது.

A late evening beautiful view of Kapaleewarar temple ,Mylapore

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று செவ்வாய்க்கே அதிபதியாகிய முருகப்பெருமானைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நாளாக மிளிரவும் .. மனநலமும் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!

” எந்தவினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்தவழி ஓடும் “ என்பது சான்றோர் வாக்கு .. 

செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைந்து வழிபட்டால் மனதிலும் .. குடும்பத்திலும் அமைதி நிலவும் .. மேலும் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களைத் தரும் ..

கந்தசஷ்டி கவசம் .. காந்தகுருகவசம் .. 
திருப்புகழ் .. முருகன்துதி பாடல்களை பாடியும் .. கேட்டும் .. முருகனையும் .. அங்காரகனையும் வணங்கி வழிபட்டு .. சகலயோகங்களும் .. வளங்களும் பெறுவீர்களாக .. 
” ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY YOU BE BLESSED WITH .. SUCCESS .. PROSPERITY AND HAPPINESS .. " OM MURUGA " ..

SWAMIYE SARANAM IYYAPPA.....PANVEL BALAGANE SARANAM SARANAM!!

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சோமவார விரதமும் .. சஷ்டித் திதியும் சேர்ந்து வருவது அதிவிசேஷம் .. ஆலயம் சென்று சிவனையும் .. கந்தனையும் தரிசிப்பது சாலச் சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்நாளாக அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற்று .. மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! ..
சிவன் என்ற தமிழ் சொல்லுக்கு சிவந்தவன் என்று பொருளாகும் .. தமிழர்கள் குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாக வழிபட்ட சேயோன் என்பதன் பொருளும் சிவந்தவன் என்பதால் சேயோனே சிவன் .. முருகன் .. இரண்டுபேருமே சேயோன் என்று கூறப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..
சிவம் என்ற சொல்லுக்கு ‘ செம்மை ‘ ( பூரணத்துவம்) ‘மங்களமானது’ என்று பொருளாகும் .. முழுமையாக தான் மங்களகரமாகவும் .. தன்னைச் சார்ந்தவர்களையும் மங்களகரமாக்குபவனும் சிவனே !
காவேரியில் நீர்பெருகி கரையுடைந்து வந்துவிட்டால் கடைசியிலே கொள்ளுமிடம் கொள்ளிடம் .. கார்த்திகையில் பிறந்தவன் கவலையெல்லாம் தீர்ப்பதுதான் கந்தன் என்று சொல்லும் ஒரு சொல்லிடம் .. என்பதனை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் .. 
கந்தா என்று சொல்லுங்கள் ! இந்தா என்று வரம் தருவான் சேயோனே ! ..
கந்தனின் திருவருளும் .. சிவனின் அருட்கடாக்ஷ்மும் பெற்று இனிதே வாழ்வோமாக .. “ ஓம் நமசிவாய ” .. 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. IT'S MONDAY .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BE WITH YOU AND REMOVE ALL THE OBSTACLES ON YOUR PATH TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA "

TODAY POOJA AT PANVEL SANNIDHANAM








பூணுல் பற்றிய சிறப்பு பார்வை
பூணுல் ஏன் இடது தோளில் அணிகிறோம். ?
பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது ?
இடது தோளில பூணுல்அணியவேண்டும் என்பது வேதத்தின் கட்டளை.
எப்பொதும் பூணுல் இடது தோளின் இருக்க வேண்டும்.
இடது தோளின் பூணுல் இருக்கும்போது அதற்கு உபவீதி என்று சிறப்புப் பெயர்.
உபவீதியாக எப்பொதும் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் (ஸதோப வீதினா பாவ்யம்) சொல்கிறது.
தேவர்களுக்கு பணிவிடை செய்யும் வேளையில் பூணுல் இடதுதோளில் இருக்க வேண்டும்.
அதாவது உபவீதியாக இருக்க வேண்டும.
நம் முன்னோர்களை ஆராதிக்கும்போது பூணுல் வலது தோளில் இருக்க வேண்டும்.
ரிஷிகளை வழிபடும் வேளையில் இரு தோளிலுமாக தொங்க வேண்டும்.
அதாவது மாலை போல அணிய வேண்டும்.
முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி.
மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை.
காலம் மூன்று.
முர்த்திகள் மூன்று.
வேதம் மூன்று.
பூணுலின் பிரிவுகளும் மூன்று.
மூன்று எண்ணிக்கை முற்று பெற்றதாக கூறும். ஏலத்தில் மூன்று முறை அழைப்பார்கள்.
நீதி மன்றத்திலும் மூன்று முறை அழைப்பார்கள்.
அது முற்று பெற்றதாக கருதுகிறோம்.
பூணுல் பரமாத்மா வடிவம் (யஞஜாக்ய பரமாத்மாய). பரமாத்மா மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரீபாத் ஊர்தவ) மூன்று அடி அளந்தவர்.
அப்போது முற்றுப் பெற்றது. தேவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும்.
அதற்கு ஆதாரமான பூணுலும் மூன்று பிரியாக இருப்பது பொருந்தும்.
அவன் ஆராதிக்கும் காயத்ரீ மூன்றடிகளோடு விளங்குபவள்.
அவளை மூன்று வேளையும் வழிபட வேண்டும்.
அதற்கு காரணமாக பூணுலும் மூன்று பிரியாக வந்தது சிறப்பு.
...

Swamiye Saranam Iyyappa.....Guruve Saranam......Panvel Balagan Patham Potri.

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானின் ஆதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் .. பகவானைத் துதித்து இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. 

அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! .. .. 

பொருள் -
குதிரைகள் பூட்டிய தேரை உடையவனை அறிவோமாக ..
கரங்களில் பாசத்தை (கயிறு) வைத்திருப்பவன் மீது தியானம் செய்கிறோம் .. சூரியதேவனாகிய அவன் நம்மை காத்து அருள்செய்வானாக .. 

தினமும் சூரிய நமஸ்காரம் செய்து காயத்ரி மந்திரங்களில் ஏதாவதொன்றை ஜெபித்து வரவேண்டும் .. இவ்வாறு செய்வதன்மூலம் இருதயநோய் குணமாகும் .. கண்களுக்கு புத்துயிர் கிடைக்கும் .. நோய்கள் விலகும் .. பயம் அகலும் .. வீரம் உண்டாகும் .. கல்வி .. வேள்விகளில் சிறந்து விளங்கலாம் .. 

ஞாயிறைப் போற்றுவோம் ! நலம் பல காண்போம் ! 
சூரியபகவானின் முழு அருளையும் பெற்று வளமுடனும் .. நலமுடனும் வாழ்வீர்களாக .. “ ஜெய் சூர்யஹ்பகவான் “ .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY THE DIVINE BLESSINGS OF LORD SURYA BE WITH YOU TODAY .. AND FOREVER MORE .. " JAI SURYA DEV " ..

 

சந்நிதானத்தில் இன்றைய பூஜை.......சுவாமியே சரணம் ஐயப்பா.....பன்வேல் பாலகன் பதம் போற்றி!! குருவே சரணம்..சரணம்!!!









SWAMIYE SARANAM IYYAPPA!! SARGURU NATHANE SARANAM IYYAPPA!!



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று ‘ வளர்பிறைச் சதுர்த்தி திதியும் ‘ கூடிவருவதால் ஆலயம் சென்று விநாயகரைத் தரிசிப்பது சாலச் சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழவும் .. செல்வாக்கும் .. சொல்வாக்கும் ..விநாயகரின் அருளால் உயர்ந்திடவும் .. பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத் புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! ..

‘ பிடித்து வைத்தால் பிள்ளையார் ‘ என்று நம் கையாலேயே பிடித்து வைத்து நாம் பூஜை செய்வதால் நமக்குப் பிடித்தமான தெய்வமாக இருக்கிறார் .. நம் வினைகளைத் தீர்த்து வைப்பதால் ” விநாயகா ” என்றும் போற்றுகிறோம் .. சிவகணங்களுக்குத் தலைவராதலால் “ கணபதி “ என்றும் .. ”கணேசர்” என்றும் வணங்குகிறோம் ..

ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம் .. கேட்டவரம் தரும் பிள்ளைக்குணம் கொண்டு என்றும் .. எவர்க்கும் .. பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாரானார் அந்தக் கணேசன் ! .. 

கூப்பிட்டக்குரலுக்கு ஓடோடி வந்து அருளுபவனே ! கணேஷா!
அனைத்து வினைகளையும் தகர்த்து வெற்றியளிப்பாயாக ! 
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 'CHATHURTHI DAY' WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESH .. MAY HE REMOVE ALL THE OBSTCLES ON YOUR PATH AND SHOWER YOU WITH ETERNAL SUCCESS .. " JAI GANESH " ..