சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று ‘வைகாசி விசாகமும் ‘ கூடிவருவதால் .. முருகனாலயம் சென்று முருகனை தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவரின் அனைத்து சங்கடங்களும் நீங்கி .. வாழ்வில் வளமும் .. மகிழ்ச்சியும் பெற வாழ்த்தி வணங்குகிறேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
நெற்றிக்கண்னொன்றில் கனலாய் வந்தாய் !
ஆறுகமலத்தில் உருவாய் நின்றாய் !
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் !
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் !
கருவாய் உயிராய் கதியாய் விதியாய் !
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !! ..
உயிர்களுக்கு நேரும் இன்னல்களை நீக்கும் பொருட்டும் .. சூரபத்மன் என்றன் அரக்கனிடமிருந்து மக்களை காப்பாற்றவும் 
தர்மம் தழைக்கவும் .. சிவபெருமான் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தை முருகனாக அவதரித்தது இந்த வைகாசி விசாக நாளில் தான் ..
மக்கள் .. பிராணிகள் .. தாவரங்கள் .. பறவைகள் .. எல்லாம் 
ஓருயிராகி .. இணைக்கப்பட்டிருக்குமென்ற உண்மையை விளக்குதலே விசாகத்திருநாளின் கருத்தாகும் .. முருகனின் நாமங்கள் முக்தி அளிப்பவை .. அறம் .. பொருள் .. இன்பம் .. வீடு .. ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குபவை என்கிறார் சிவன் .. 
முருகனைப் போற்றுவோம் ! அவரது திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக .. 
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. TODAY IS THE BIRTH OF LORD MURUGA .. HE TOOK BIRTH AS SIX FLAMES FROM THE THIRD EYE OF LORD SHIVA ON THIS 'VAIKASI VISAKAM' .. HIS ENERGY IS AVAILABLE FOR YOU ALL TO CALL IT INTO YOUR LIFE TO DESTROY ALL NEGATIVE INFLUENCES THAT STOPPING YOU .. MAY MURUGAS BLESSINGS AND PROTECTION BE WITH YOU TODAY AND FOREVER MORE .. " OM MURUGA "

No comments:

Post a Comment