சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று செவ்வாய்க்கிழமையும் பௌர்ணமியும் கூடிவரும் நாளில் துர்க்கை அம்மனை வழிபட்டால் சகல துன்பங்களும் .. கவலைகளும் நீங்கும் .. தங்களனைவருக்கும் அனைத்து துயரங்களும் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் காத்யாயனாய வித்மஹே !
கன்யாகுமாரி தீமஹி !
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத் !! 


துர்க்கா என்ற வார்த்தைக்கு ‘வெல்லமுடியாத’ என்ற அர்த்தமாகும் மனிதர்களின் அனைத்து துன்பங்களையும் போக்குபவராக விளங்குகிறார் .. இந்துபுராணத்தில் புகழ்பெற்ற கடவுளாக விளங்குகிறார் .. அன்னை பத்துகைகளில் ஆயுதங்கள் ஏந்தி .. மூன்று கண்களுடன் சிங்கத்தின்மீது சவாரி செய்யும் தோரணையில் காட்டப்பட்டுள்ளார் .. மிகவும் சக்தி 
வாய்ந்த அம்மனாக பார்க்கப்படும் துர்க்கை படைத்தல் .. காத்தல் மற்றும் அழித்தல் என்ற அனைத்து செயல்களையும் வழிநடத்துகிறார் ..

துர்க்கை கையில் இருக்கும் ஒவ்வொரு ஆயுதமும் ஒவ்வொன்றைக் குறிக்கும் .. வில்லும் அம்புகளும் ஆற்றலைக் குறிக்கும் .. தன் கையில் வில்லையும் அம்புகளையும் ஏந்தி நிற்பதால் அண்டசராசரத்தில் உள்ள அனைத்து ஆற்றல் சக்திகளையும் கட்டுப்படுத்துபவர் அன்னையே என்பதை அது குறிக்கும் .. 

இடியேறு - கடவுளின் கையில் இருக்கும் இடியேறுஅவரின் திடத்தைக் குறிக்கும் .. சவால்களை சந்திக்கும்போது இடியை மனதில் வைத்துக்கொண்டு சவால்களைச் சந்திக்கவேண்டும் என்று பக்தர்களுக்கு இது தூண்டுதலாக விளங்கும் .. 

பாதிமலர்ந்த தாமரை -துர்க்கை அம்மன் கையில் இருக்கும் பாதியாக பூத்த தாமரை வெற்றி நிரந்தரமல்ல என்பதைக் குறிக்கும் .. மேலும் சேறுக்கு மத்தியில் தாமரை பூப்பதைப்போல் உலகத்தில் உள்ள பல சுகங்களுக்கு மத்தியில் 
மனிதமனது ஆன்மீகத்தை நாடவேண்டும் என்பதையும் குறிக்கும் .. 

வாள் - அறிவை குறிக்கிறது .. அறிவே உலகத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாக விளங்குகிறது என்பதை குறிக்கிறது .. வாளின் பளபளப்பும் .. கூர்மையும் மேலும் அது துருபிடிப்பதும் இல்லை என்பதையும் குறிக்கிறது .. 


சுதர்சன் சக்ரா - உலகம் தன் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகிறது என்பதை கடவுளின் ஆள்காட்டி விரலில் அழகாக சுழலும் சக்கரம் குறிக்கிறது .. தீயசக்திகளை அழிக்க துர்க்கை அம்மன் இந்த ஆயுதத்தை பயன்படுத்துவார் .. 

திரிசூலம் - மூன்று அம்சங்களைக் குறிக்கும் .. சத்வா .. ராஜாஸ் 
மற்றும் தாமஸ் .. அமைதியையும் .. மோட்சத்தையும் .. அடைய ஒருவர் இந்த மூன்று அம்சங்களையும் சரிசமமாக கொண்டிருக்க வேண்டும் .. 

அபாயமுத்திரை - அன்னையின் ஒருகை எப்போதும் தன்பக்தர்களை ஆசீர்வதிக்கும் அபாயமுத்திரையை கொண்டிருக்கும் .. தன்பக்தர்களை பயத்திலிருந்து எப்போதும் காப்பதை இது குறிக்கும் .. 

அன்னையைப் போற்றுவோம் ..அனைத்து காரியங்களிலும் வெற்றியும் .. அன்னையின் அருட்கடாக்ஷ்மும் பெற்றிடுவோம் .. ” ஓம் சக்தி ஓம் “ ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS DURGA
MAY 'MAA DURGA' BRING COUNTLESS BLESSINGS AND ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS .. AND PROSPERITY .. 'JAI MATA DI' ..

No comments:

Post a Comment