PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. உடல் நலமும் .. மனநலமும் ஆரோக்கியமாகத் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! ..

உலகில் நீதியை நிலைநாட்டி காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணுபகவான் .. உலகைத் தீய சக்திகள் ஆட்டிப்படைக்கும் பொழுது மண்ணில் பலவகையான அவதாரங்களில் அவதரித்து அத்தீய சக்திகளை அழித்து மக்களைக் காப்பார் .. 

அந்த அவதாரங்களில் குறிப்பிடத் தக்கவை வினோதமான மனிதனும் சிங்கமும் இணைந்த உருவ அமைப்பினை உடைய நரசிம்ம அவதாரமும் .. மனித உருவிலேயே அவதரித்த ராமர் ..
மற்றும் கிருஷ்ண அவதாரங்களும் ஆகும் .. 

விஷ்ணுவின் தெய்வீகத் தன்மையைச் சித்தரிப்பது அவருடைய நான்கு கரங்களும் .. அவற்றில் வழக்கமாக ஏந்திய .. கதை .. சங்கு .. சக்ரம் போன்றவைகளும் ஆகும் .. 

மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் .. வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுவோம் .. 
“ ஓம் நமோ நாராயணா “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF
LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM NAMO NAARAAYANAA " ..

No comments:

Post a Comment