அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் போற்றித்
துதிக்கப்படும் குருநாதராகிய ‘ ஷீரடி பாபாவின் ‘ நாளும் ஆகும்
தங்களனைவரும் ஸ்ரீசாயியின் அமுதமொழிகளை விடாமல் நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் அனைத்து கவலைகளும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகிவிடும் என்பது சத்தியமான உண்மை ..
ஓம் ஷீரடி வாஸாய வித்மஹே !
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !! ..
ஷீரடி பாபாவின் அமுதமொழிகளில் சில -
1) பொறு .. உன்னுடைய கவலைகளைத் தூர எறி ! உன்னுடைய துன்பங்கள் ஒருமுடிவுக்கு வந்துவிட்டன .. ஒருவன் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும் இச்சமாதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான் ..
2) நடந்து கொண்டிருப்பதை நடத்தி வைப்பது உன் உள்ளிருக்கும் நானே ! என்று நீ கண்டுகொண்டால் ஒரு க்ஷணகாலத்தில் நீ என்னை பார்க்க முடியும் .. நான் என்ற விஷயத்தை நீ மறந்த அதே வினாடியிலேயே நானாகவே உன் முன்பாக இருப்பேன் ! .. “ உன் ஆத்ம சொரூபமே நான் தான் “ ..
சதாகாலமும் சாயி ! சாயி ! என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள் .. நினைத்தது .. விரும்பியது அனைத்தும் நிறைவேறும் ..
” ஓம் சாய் ராம் ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI ..
MAY YOU BE BLESSED WITH .. SUCCESS .. PROSPERITY AND HAPPINESS .. " OM SAI RAM " ..
No comments:
Post a Comment