சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று திருவோண நட்சத்திரம் இதனை ஸ்ரவண விரதம் என்பர் .. மஹாவிஷ்ணுவுக்குரிய நாளாகும் .. பகவானைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிமையான நன்னாளாகவும் .. மனநலமும் .. உடல்நலமும் நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும் வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாஸுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!

மாதந்தோறும் திருவோண நாளன்று நாராயணனை வழிபட்டு விரதங்காப்பது ஸ்ரவண விரதமாகும் .. தனிமனிதனின் உள்ளத்தை தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத் தரும் .. இவ்விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் சண்டைசச்சரவுகள் ஏதும் இருக்காது .. வாழ்வில் அமைதி ஏற்படும் உறவினர் கொண்ட பகை அகலும் .. பகைவர் நண்பராவர் .. அனைத்து துன்பங்களும் நீங்கும் .. 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோயிலில் மாதாமாதம் ஸ்ரவணம் என்ற விழா பிரசித்தம் ..
“ மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ ( என்னை சரணடைந்தால் உன்னை நான் காப்பேன் ) என்ற சரமச் லோகப் பகுதி எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது .. 
தனக்கு ஒப்பாரும் .. மிக்காரும் இலார் என்ற பதத்திலேயே 
ஒப்பிலா அப்பன் .. ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார் .

நாராயணனைப் போற்றுவோம் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுவோம் .. 
” ஓம் நமோ நாராயணாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY AND MAY LORD VISHNU BLESS YOU WITH HAPPINESS .. GOOD FORTUNE .. AND PROSPERITY .. 
" OM NAMO NAARAYANAA "

No comments:

Post a Comment