சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சஷ்டி திதி வருவதால் முருகனாலயம் சென்று முருகனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது 
இன்றைய தினம் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக மிளிரவும் .. தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் எவ்வித தடங்களுமின்றி வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹா ஸேநாய தீமஹி !
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !! 

முருகப்பெருமானுக்கு இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி அவரை வழிபட்டு வந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம் ..

நாம் முருகனை கந்தா ! கடம்பா ! கார்த்திகேயா ! அழகா ! மால்மருகா ! சிவகுமாரா ! என்று அகமும் புறமும் உருகி வழிபட நம் மனதில் உருவாகும் கோபம் .. சூழ்ச்சி .. வஞ்சகம் .. பொறாமை .. அகங்காரம் .. ஆணவம் .. போன்ற கெட்டகுணங்களாகிய அசுரர்களை அழித்து நம்மனதில் நல்ல சிந்தனைகளை விருட்ஷமாக வளர்ந்து தழைக்க விதைப்பவரும் முருகனே ! .. 

நமக்காக “ யாமிருக்க பயமேன் “ என்று கூறியபடியே மயில் வாகனம் ஏறி உலகெங்கும் சுற்றிவந்து புன்முறுவலுடன் வேல்கொண்டு நம்வினை தீர்க்கும் முருகனை நம் சிந்தனையில் என்றும் நிலையாய் நிறுத்தி ஆனந்தமாய் வழிபடுவோமாக .. 

வேல் இருக்க வினையுமில்லை ! மயிலிருக்க பயமுமில்லை ! 
முருகா சரணம் ! முத்தமிழ் வித்தகா சரணம் ! 
”ஓம் சரவணபவாய நமஹ” வாழ்க வளமுடனும் .. நலமுடனும்.... 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. 
MAY HE GUIDES YOU AND REMOVE ALL THE OBSTACLES ON YOUR PATH .. " OM MURUGA " ..

No comments:

Post a Comment