சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
செவ்வாய்க்கிழமையாகிய இன்று மாலையில் தேய்பிறை அஷ்டமித் திதி ஆரம்பமாவதால் ‘ பைரவரைப் ‘ பூஜிப்பது விசேஷம் .. தங்கள் இன்னல்கள் யாவும் களைந்து .. நிம்மதியும் .. சந்தோஷமும் பெற்றிடுவீர்களாக .. 

ஓம் திகம்பராய வித்மஹே ! 
தீர்கதிஷாணாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

பைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் சிறந்த நாளாகும் .. ஏனென்றால் அன்றைய நாளில்தான் 
அஷ்ட லக்ஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாகவும் .. அதனால் அன்று அவரை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம் என்பது ஐதீகம் ..

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார் .. “ வைரவர் “ என்றும் அறியப்படுகிறார் .. பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது .. 

பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர் .. யோகபைரவர் .. ஆதிபைரவர் .. காலபைரவர் .. உக்ரபைரவர் என்றெல்லாம் அழைக்கிறார்கள் .. 

இழந்த பொருட்களை மீண்டும் பெற பைரவர் சன்னதிமுன்னால் 27 மிளகை வெள்ளைத்துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல்விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாட்கள் வழிபட்டால் இழந்த பொருட்களும் .. சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும் .. 

சனிபகவானின் அருள்கிடைக்க .. தோஷம் நீங்க .. சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால் பைரவரை வணங்கினால் சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார் .. எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனிபகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும் .. 

பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் .. எமபயம் இருக்காது எதிரிகள் அழிவர் .. வழக்குகளில் வெற்றி காணலாம் என்று சிவகாமியம் என்னும் நூல் கூறுகிறது .. 

பைரவரைப் போற்றுவோம் சகலவளங்களும் .. நலங்களும் பெற்று .. அனைத்திலும் வெற்றி காண்போமாக ! வெற்றி நிச்சயம் ! “ ஓம் பைரவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. LORD BHAIRAVA WORSHIP WILL SLOWLY DISPEL ALL THE NEGATIVITY AND WILL BLESS THE DEVOTEE WITH A PEACEFUL LIFE .. INDIVIDUALS THAT ARE SUFFERING FROM NIGHTMARES .. DISTURBANCE FROM EVIL SPIRITS 
NEGATIVE ENERGIES .. SPELLS BLACK MAGIC .. EXCETERA .. 
MAY LORD BHAIRAVA BLESS YOU FOR A SUCCESSFUL LIFE .. " JAI BHAIRAVA " .

 

No comments:

Post a Comment