PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று ஆடிவெள்ளி முதலாம் நாள் .. அம்மனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் மன அமைதியும் .. மனமகிழ்ச்சியும் கிடைத்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராண்யை வித்மஹே !
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ கௌரீ ப்ரசோதயாத் !! 

ஆடிமாதம் பண்டிகைகள் அணிவகுத்துத் துவங்கும் மாதம் .. தக்ஷிணாயன புண்யகாலம் துவங்குவதும் ஆடிமாதம் முதலே! 

அயனம் என்றால் - வழி .. 
தக்ஷிணம் என்றால் - தெற்கு என்று பொருள் .. சூரியன் சற்றுத் தெற்கு நோக்கிச் சஞ்சாரம் செய்யத் துவங்குவதால் தக்ஷிணாயனம் என்று பொருள் .. நமது ஒருவருடம் தேவர்களுக்கு ஒரு நாள் .. உத்தராயணம் தேவர்களின் பகல் காலமாகவும் .. இன்றிலிருந்து தக்ஷிணாயனம் ஆரம்பமாவதால் தேவர்களுக்கு இரவுக் காலம் என்றும் கருதப்படுகிறது .. 

ஆடிமாதத்தை ‘சக்தி மாதம் ‘ என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன .. தக்ஷிணாயனம் துவங்கும் ஆடிமாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும் .. பிராணவாயு அதிகமாகக் கிடைக்கும் .. உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே .. 

வேதபாராயணங்கள் .. மந்திரங்கள் .. ஜெபங்களுக்கும் ஆடிமாதம் சிறந்தது .. ஆடிமாதம் அம்பிகைக்கு உகந்தமாதம் ..
மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம் .. 

சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடிமாதத்தில் அதிகமாக இருக்கும் .. ஆடிமாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம் .. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வது சிறப்பு ..

அன்னையைப் போற்றுவோம் .. அவளது அருட்கடாக்ஷ்த்தினைப் பெற்றிடுவோமாக .. இல்லம்தேடிவருவாள் ஜகந்மாதாவான அன்னை ..
“ ஓம் சக்தி ஒம் “ 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS DURGA .. 
MAY 'MAA' DURGA BRING BLESSINGS AND FORTUNE INTO YOUR LIFE WITH HAPPINESS AND PROSPERITY .. 


" JAI MATA DI " ..

No comments:

Post a Comment