சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. முதலாம் ஆடிச்செவ்வாயாகிய இன்று அன்னைக்கு உகந்த நாளாகும் .. அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிமையான நன்னாளாக அமைந்திடவும் 
உடல் நலமும் .. மனநலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஸர்வஸம் மோஹின்யை வித்மஹே !
விஷ்வ ஜனன்யை தீமஹி !

தந்நஸ் சக்தி ப்ரசோதயாத் !! 

“ ஆடிச்செவ்வாய் தேடிக்குளி “ என்ற பழமொழி ஒன்றே இவ்விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது .. காரணம் செவ்வாய்க்கிரகம் சனிக்கிரகம்போல் ஒரு ஜாதகருக்கு பெரும் தோஷத்தை (கஷ்டத்தை) ஏற்படுத்தக் கூடியது செவ்வாய் .. சனி போன்ற பாவக்கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும்போது அதன் கதிர் வீச்சுக்கள் எம்மைத் தாக்கும் .. தீவிரமாக வரும் கதிர்களை நல்லெண்ணெயில் ஊறிய எமது உடம்பு தாக்கவிடாது தடை செய்கின்றது .. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணை முழுக்கு என யூகிக்க முடிகின்றது .. 

ஆடிச்செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து மஞ்சள்பூசித் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்யபலம் கூடும் .. தோஷங்கள் நிவர்த்தியாகும் .. எல்லாத் தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம் ..

அம்மனைப் போற்றுவோம் ! சகல தடைகளையும் வெல்வோம்! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY 'MAA SHAKTHI' EMPOWER YOU AND YOUR FAMILY WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI MATA DI
" ..

No comments:

Post a Comment