SWAMIYEE SARANAM IYYAPPA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் .. சதுர்த்தி திதி மதியம்வரை இருப்பதால் 
காலைவேளையில் ஆலயம் சென்று சிவனையும் கணபதியையும் தரிசிப்பது அதிவிசேஷமாகும் .. இன்றையநாள் தங்களனைவருக்கும் ஒரு சுபீட்சமிக்க நன்நாளாகவும் .. செய்யும் அனைத்துக் காரியங்களும் எவ்வித தடங்களுமின்றி வெற்றி பெறவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

” நமசிவாய “ என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூலமந்திரம் .. சிவம் என்றால் மங்களம் என்று பொருள் .. தீட்சை (தீக்‌ஷை) பெற்றிருந்தாலும் ..பெறாவிடினும் 
‘நமசிவாய’ என தாயைக் கூவியழைக்கும் சேய்போல் அழைக்க
யாவருக்கும் உரிமை உண்டு .. 

கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில்வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதுபோல் சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களையெல்லாம் சிவமயமாக்குகிறார் .. சிவத்தை அணைத்துக்கொண்டால் யமனும் நமை வணங்குவான் .. 

சிவனைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி காண்போமாக! வெற்றி நிச்சயம் ! .. “ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED AND A SUCCESSFUL MONDAY .. MAY LORD SHIVA'S DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA "

No comments:

Post a Comment