SWAMIYE SARANAMIYYAPPA....PANVEL BALAGAN PATHAM POTRI


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் அன்னை மஹாலக்ஷ்மிக்கு உகந்த நாளாகும் .. 
அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் சகலசம்பத்துக்களும் பெற்று .. மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்ந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே !
விஷ்ணு பத்னீ ச தீமஹி !

தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! .. 

அம்பாள் அனேக அம்சங்களை உடையவள் .. யார் .. யார் எப்படி விரும்புகிறார்களோ அம்முறையில் அம்சங்களை ஏற்று அவள் காட்சி தருகிறாள் .. 

எங்கும் நிறைபொருளாகக் காணப்படும்போது அவள் பூரணி என்றழைக்கப்படுகிறாள் .. 
சக்தி நிறைந்தவளாய் சர்வவல்லமை பொருந்தியவளாய் போற்றப்படும்போது பராசக்தி என்றும் .. ராஜராஜேஸ்வரி என்றும் .. மூலப்பிரகிருதி என்றும் பெயரிடப்படுகிறாள் .. 
முத்தொழிலைச் செய்யுமிடத்து பிரம்மாணி .. வைஷ்ணவி .. ராத்ராணி என்று அவள் பெயர் படைக்கிறாள் .. 
சகுணப் பிரம்மம் அல்லது ஈஸ்வரனுக்கு ஒப்பாகும்போது துர்க்கை எனப்படுகிறாள் .. 
காலசொரூபிணியாகத் தோன்றுமிடத்துக் காளியாகிறாள் .. 
வித்தையின் வடிவமாகும்போது ஸரஸ்வதி என்றும் .. 
தனதான்ய வடிவமெடுக்கும்போது லக்ஷ்மி என்றும் ..
ஞாலத்தை ஆதரிக்கும் மகாதேவி ஜகதாத்ரியாகவும் ..
பவதாரிணியாகவும் போற்றப்படுகிறாள் .. 

வையகமெல்லாம் ஆதரிக்கும் அன்னையைப் போற்றுவோம்! 
பக்தி சிரத்தையுடன் மஹாலக்ஷ்மியை வழிபடுவோமாக !
” ஓம் சக்தி ஓம் ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY 
WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI .. MAY 'MAA' LAKSHMI BRING BLESSINGS AND ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS AND PROSPERITY .. " JAI MATA DI "
..

No comments:

Post a Comment