அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ஆவணி இரண்டாம் ஞாயிறும் .. காயத்ரி ஜபத்திற்குரிய விசேஷட நாளுமாகும் .. இன்றைய நாளில் தங்களனைவரும் காயத்ரிதேவியின் அருட்கடாக்ஷ்ம் பெற்று உளத்தூய்மையும் .. மனத்தூய்மையும் அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் பூர்புவஸ்ஸுவ ! தத்ஸவி துர்வரேண்யம் ! பர்கோ தேவஸ்ய தீமஹி ! தியோ யோன ப்ரசோதயாத் !! எவர் நமது அறிவைத்தூண்டி பிரகாசிக்கச் செய்கிறானோ ! அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக ! என்பதே காயத்ரி மந்திரத்தின் பொருளாகும் .. கௌசிகன் எனும் மன்னர் தம் தவப்பயனால் பிரம்மரிஷி பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்று பெயர் பெற்று விஸ்வத்திற்கே வரப்பிரசாதமான ‘காயத்ரி மந்திரத்தை ‘ நமக்களித்தவர் .. பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற அஸ்திரத்திற்கு ‘ காயத்ரி மந்திரமே ‘ ஆதாரம் ..இதை “ பிரம்ம தேஜோபலம் ” எனக் குறிப்பிடுகிறார் விஸ்வாமித்திரர் .. மகிமைவாய்ந்த காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை காயத்ரிதேவி .. காயத்ரிதேவியின் ஐந்துமுகங்களும் சிவபெருமான் நிகழ்த்துகின்ற சிருஷ்டி .. ஸ்திதி .. ஸம்ஹாரம் .. திரோதனம் .. அனுக்ரஹம் .. ( படைத்தல் .. காத்தல் .. அழித்தல் .. மறைத்தல் அருளல் ) என்ற ஐந்து செயல்களை நினைவூட்டும் வகையில் சரஸ்வதி .. லக்ஷ்மி .. பார்வதி .. மஹேஸ்வரி .. மனோன்மணி என்ற தேவதைகளின் ஐந்துமுகங்களைக் குறிப்பிடுவதாகவும் கருதப்படுகிறது .. ஐந்து தேவதைகளைக் குறிக்கின்ற வகையில் சிவப்பு .. முத்துநிறம் .. மஞ்சள் .. நீலம் .. வெண்மை ஆகிய நிறங்களில் காயத்ரிதேவியின் ஐந்து முகங்கள் பிரகாசிக்கின்றன .. காயத்ரிதேவி விஷ்ணுலோகத்தில் ஸ்ரீமஹாலக்ஷ்மியாகவும் .. பிரம்மலோகத்தில் காயத்ரியாகவும் .. ருத்ரலோகத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் .. விளங்குவதாக இது குறிப்பிடுகிறது .. காயத்ரி மந்திரத்தை இடைவிடாது நேரம்கிடைக்கும் போதெல்லாம் ஜபம் செய்து அலைபாய்கின்ற மனத்தை ஒருமுகப்படுத்தி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் .. அஷ்டமாசித்திகளையும் பெறுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS OF GODDESS ' MAA GAYATRI ' .. MAY SHE SHOWER YOU WITH STRENGTH .. GOOD FORTUNE .. PEACE AND PROSPERITY .. " OM SHAKTHI OM " .. JAI MATA DI

No comments:

Post a Comment