SWAMIYEE SARANAM IYYAPPA ...


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்குரிய சோமவார விரதமும் வருவதால் ஆலயம் சென்று ஈசனைத் தரிசனம் செய்வது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் எவ்வித தடங்கலுமின்றி வெற்றிப்பெறவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்
ர ப்ரசோதயாத் !! 

சோமவாரம் என்பது திங்கள் கிழமையைக் குறிக்கும் .. 
“ சோம “ என்பது சந்திரனையும் குறிப்பதாக உள்ளது .. சந்திரனுக்கு தமிழில் திங்கள் .. மதி .. நிலவு .. என்ற பெயர்களும் உண்டு .. ஈசனையும் சந்திரனையும் குறிக்கும் சோமவார விரதம் மூலம் சிவனை வழிபடும் வழக்கம் புராண வரலாற்றைப் பின்பற்றியது .. 

தட்சனின் சாபத்தால் ஒளிகுன்றிய சந்திரனை தன் தலையில் சூட்டிக்கொண்டு சந்திரனின்பிறை தொடர்ந்து வளர அருள் செய்தார் ஈசன் ..இவ்வாறு ஈசன் சந்திரனை தலையில் சூட்டிக்கொண்ட தினமே சோமவாரம் திங்கள் கிழமையாகும் ..
சோமவாரவிரதம் மூலம் சிவனை வழிபடுவது மிகவும் எளிதானது .. உத்தமமான விரதங்களுள் ஒன்று இதுவே என்று வேதநூல்கள் கூறுகின்றன .. 

சிவனைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி பெறுவோமாக ! வெற்றி நிச்சயம் ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES AND SHOWER YOU WITH FULL OF JOY AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH
..

No comments:

Post a Comment