அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று கடைசி ஆடிவெள்ளிக்கிழமையும் .. ஆடிஅமாவாசையும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று பித்ருதர்ப்பணம் செய்வது சிறந்தது .. அத்துடன் அன்னை மஹாலக்ஷ்மியையும் தரிசிப்பது சாலச்சிறந்தது ..
அனைவருக்கும் அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பரிபூரணமாகக் கிடைத்து சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்களாக ..
நமஸ்தேஸ்து மஹாமாயே ! ஸ்ரீபீடே ஸுரபூஜிதே !
சங்க சக்ர கதா ஹஸ்தே ! மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !!
சங்க சக்ர கதா ஹஸ்தே ! மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !!
மாதந்தோறும் வரும் அமாவாசையன்று இந்துக்கள் தனது முன்னோர்களை வழிபாடு செய்வது வழக்கம் .. ஆடி மற்றும் தை அமாவாசையில் தர்ப்பணம் செய்தால் முன்னோர்வழிபாடு முன்னேற்றம் தரும் என பெரியவர்களால்
கூறப்படுகிறது ..
கூறப்படுகிறது ..
நமது வாழ்வில் தினமும் ஏதாவதொரு பாவத்தை செய்யும் சூழ்நிலை இயல்பாகவே அமைந்து வருகிறது .. தெரிந்தும் .. தெரியாமல் செய்யும் பாவங்கள் என்று அவை நீண்டுகொண்டே போகின்றனவே தவிர குறைவதில்லை .. மனிதப்பிறவி அரியது .. நம்மை அன்புடன் பேணி .. அருமையாக வளர்த்து ஆளாக்குகுன்றனர் பெற்றோர் .. எவ்வித சுயநலமின்றி பாசத்தைக் கொட்டி பராமரிக்கும் தந்தையரை சரிவர புரிந்துகொண்டு தங்கள் கடமைகளை செய்பவர்கள் வெகுசிலரே ! நமக்கு நல்வாழ்வு அளித்துச் சென்ற பித்ருக்களுக்கு பித்ரு தர்ப்பணபூஜையை செய்யாமல் தவறவிடுகின்றனர் சிலர் .. பித்ருக்களை திருப்தி செய்வதற்குத்தான் தர்ப்பணபூஜை ..
தேவலோக மூலிகையான தர்ப்பையால் எள்வைத்து அனைவரும் தர்ப்பணம் செய்து மூதாதையரை மகிழ்விப்பது கடமை .. மிகபுராதணமான நூல்களும் .. உபநிஷத்துக்களும் பித்ருபூஜையின் மகத்துவத்தைச் சிறப்பாக கூறியுள்ளன ..
இந்நாளில் எந்த ரூபத்திலும் பித்ருக்கள் நம்மிடையே வருவார்கள் .. அதனால் அன்றைய தினம் நம்வீடு தேடிவருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் அன்னமிடுவது அவசியம் .. தினமும் காகத்திற்கு ஒருபிடி அன்னம் வைத்துவிட்டு .. பிறகு உண்பது பலவித தோஷங்களையும் போக்கும் .. காகத்தின்மூலம் அவை பித்ருக்களுக்குப் போய்ச்சேரும் ..
நம்மை ஆசீர்வதித்துக் காப்பாற்ற பித்ருக்கள் எப்போதும் தயாராக உள்ளபோது நாம் அவர்களை மறக்கலாமா ? .. முன்னோர்களை வழிபட்டு முன்னேற்றமடைவோமாக ..
“ பித்ரு தேவோ பவ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
“ பித்ரு தேவோ பவ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI AND OUR BELOVED ANCESTORS ON THIS AMAVASYA DAY ..
" PITHRU DEVO BAVA "
" PITHRU DEVO BAVA "
No comments:
Post a Comment