SWAMIYE SARANAM IYYAPPA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. 
‘ இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்களும் ‘ உரித்தாகட்டும் .. 
சனிக்கிழமையாகிய இன்று சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய தினம் 
தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் எவ்வித தடங்களுமின்றி வெற்றியளிக்க வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!
“ நமசிவாய “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும் .. சிவன் கோவிலுக்குச் சிறிதளவு பணிசெய்தாலும் மகத்தான பலன்கிட்டும் .. சிவலிங்கத்திற்கு வலைகட்டி பாதுகாத்த சிலந்தி .. மறுபிறவியில் ‘ கோட்செங்கட்சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பலமாடக்கோயில்களைக்கட்டித் திருப்பணி செய்து புகழ்பெற்றான் .. சிவன்கோயில் விளக்கு எரிய தூண்டிவிட்ட எலி மறுபிறவியில் சிவனருளால் ’மகாபலி சக்ரவர்த்தியாகப் ‘ பிறந்தான் ..
சிவன் நாமத்திற்கு அப்படியொரு மகிமை .. “ சிவ .. சிவ “ .. 
என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும் 
சகலபாவங்களும் நீங்கி .. மனம் தூய்மை அடையும் ..
சிவனைப்போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் ! “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY AND BEST WISHES FOR A ' HAPPY INDEPENENCE DAY ' TOO .. MAY LORD SHIVA BLESS YOU AND SHOWER HIS BLESSINGS WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. 
" OM NAMASHIVAAYA " ..

No comments:

Post a Comment