SWAMIYEESARANAM IYYAPPA...GURUVE SARANAM...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று உலகமக்களைக் காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்த நாளாகும் .. ஆடிப்பூரம் என்னும் நன்னாள் .. அன்னையைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் ..

ஓம் ஸர்வஸம்மோஹின்யை வித்மஹே !
விச்வ ஜனன்யை தீமஹி !
தந்நஸ் சக்தி ப்ரசோதயாத் !! 


ஆடிப்புரம் என்னும் விழா ஆடிமாதத்திலே பூரநட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது கொண்டாடப்படுவது .. இது தேவிக்குரிய திருநாளாகும் ..இந்நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு .. சித்தர்களும் .. யோகிகளும் இந்தநாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன 

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் விளையாடும் அகிலாண்டகோடி அன்னைக்கு மஞ்சள்காப்பு .. சந்தனக்காப்பு .. குங்குமக்காப்பு நடத்துவார்கள் .. அன்னைக்கு வளைகாப்பு நடக்கும்நாள் தான் ஆடிப்பூரம் .. அன்னை உள்ளம் மகிழ்ந்து பக்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள் .. பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம் .. 

மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்களை பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன .. 

ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம் .. ஆடிமாதத்தில் துளசித்தோட்டத்தில் ஆண்டாள் அவதரித்தாள் .. அரங்கனுக்குச்
சூட்டவேண்டிய ஆரத்தினை தானே சூடிக்கொண்டு ஆடியில் அழகுபார்த்தாள் ஆண்டாள் .. தான் சூடிக்களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் .. “ சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று திருநாமம் பெற்றாள் .. அப்போது அந்தக்கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள் .. தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினமாகிய இன்று அன்னையைப் போற்றுவோம் .. அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் .. “ ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS ' MAA SHAKTHI ' 
MAY DEVI MAATAA SHOWER YOU WITH PEACE AND PROSPERITY .. 

" JAI MATA DI " ..

No comments:

Post a Comment