சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவனுக்கு உகந்த நாளாகிய ..
’ சோமவார விரதத்தை’ அனுஷ்டிக்கும் நாளாகும் .. சிவாலயம் சென்று சிவனைத் தரிசித்து வந்தால் நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும் .. தங்களனைவருக்கும் ஏற்பட்ட அனைத்து தடைகளும் நீங்கி வெற்றிபெற வாழ்த்துகிறேன் .. சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

‘ சோமன் ‘ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும் ‘ .. அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு ..
தட்சனின் சாபத்தால் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட
சந்திரன் மிகவும் கவலையுற்றான் .. சிவனைத் தஞ்சம் அடைந்ததால் சிவன் மனமிரங்கி சந்திரனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார் .. இதனால் சந்திரனின் சாபம் பாதியாகக் குறைந்தது .. மாதத்தில் 15 நாட்கள் தேய்வதும் .. வளர்வதுமாக அவனது சாபம் மாறுதல் பெற்றது ..
சந்திரனும் இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்கவேண்டும் என்று சிவனிடம் வரம் கேட்டான் .. அவ்வாறு வரம் அளித்து அருளினார் ஈசன் .. 

சிவனைப்போற்றுவோம் ! அனைத்து சோதனைகளையும் 
வென்றிடுவோம் ! வாழ்வில் வெற்றி நிச்சயம் ! 
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. 
MAY HE REMOVE ALL THE OBSTACLES ON YOUR PATH AND SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. 
' JAI BHOLE NATH ' ..

No comments:

Post a Comment