அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் எங்கள்
” பக்ரீத் திருநாள் ” நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .. 
வியாழக்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் வருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவைத் தரிசிப்பது சாலச்சிறந்தது ..இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் .. உடல்நலமும் .. மனநலமும் .. ஆரோக்கியத்துடன் திகழவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

”காயத்ரி மந்திரத்திற்கு நிகரான மந்திரம் இல்லை .. தாய்க்கு சமனான தெய்வமும் இல்லை .. காசியைவிட சிறந்த தீர்த்தமும் இல்லை .. ஏகாதசிக்கு நிகரான விரதமும் இல்லை”
என்பர் .. 

இன்று “ பத்மநாபா ஏகாதசி “ .. இந்த ஏகாதசி விரதமிருந்தால் குடும்ப ஒற்றுமை சிறக்கும் .. வளமான வாழ்வும் தரும் .. சூரியவம்ச மன்னன் ஒருவர் அரசாண்டகாலத்தில் பஞ்சம் ஏற்பட்டது .. ஆங்கிரஸமுனிவரின் அறிவுரைப்படி அந்த மன்னன் இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து பஞ்சம் நீங்கப்பெற்றான் .. 

ஏகாதசித்திதியில் மஹாவிஷ்ணுவைப் போற்றித்துதித்து பெருமாளின் பரிபூரண அருளையும் .. அன்பையும் பெற்று நீங்காப்புகழுடன் வாழ்வீர்களாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. “ ஓம் நமோ நாராயணா “ .. 

WISH YOU ALL A HAPPY MORNING WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH 
BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. 
"OM NAMO NAARAAYANAA " ..

No comments:

Post a Comment