தங்க சிம்மாசனத்தில் பன்வேல் பாலகன்...



பன்வேல் பாலகனின்
பவித்திர இருக்கை!
கண்கவர் பொன்வண்ணம்
கண்ணிலே நிற்கும்!
மலரின் மெளனம்
மலர்ந்திடப் புரியும்
மா தவமோ !
மனதின் மெளனம்
மனிதன் உயர்ந்திட தந்த
பாலகன் வரமோ !

மோனத் தவத்தில்
மோகனத் தோற்றம்
மோட்சம் தரும்
மோகனன் ரூபம்!


மெளனத் தவத்தில்
அமர்ந்த மனம்
பேரின்ப வெளியில் விரிந்திட வேண்டும்!

மலருக்கு தென்றல் இறைவன்
மனிதனுக்கு தென்றல்
மகிஷியை வென்ற
மகானுபாவன்!

சரணம் சொல்லி
அவனருள் வேண்டி
ஆத்ம சுகத்தை
அனைவரும் பெறுவோம்!!

கவிதையாக்கம்
ராம்கி
 

No comments:

Post a Comment