SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. விஜயதசமி நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .. வாழ்வில் எதிலும் வெற்றிகிட்டும் என்பதால் தாய்மையைப்போற்றி வழிபாடு செய்த நவராத்திரியும் இன்றோடு நிறைவு பெறுகின்றது .. அன்னையின் ஆசியும் .. அன்பும் .. அரவணைப்பும் சகலசௌபாக்கியங்களும் தங்களனைவருக்கும் கிடைத்திட பிரார்த்திக்கின்றேன் ..
விஜயதசமியாகிய இன்று சின்னஞ்சிறார்களுக்கு வித்தியாரம்பம் எனப்படும் ஏடு துவக்குகின்ற சிறப்பு நிகழ்வும்
இடம்பெறுகின்றன .. இன்று தொடங்கப்படும் எந்தக்காரியமும்வெற்றிகரமாக அமையும் ..
முப்பெருந்தேவிகளான உலக இயக்கத்தின் சக்தியாக ஆதாரமாக விளங்கும் அன்னையின் அருளாசியுடன் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும் நாளாக .. வெற்றியின் ஆரம்பநாளான விஜயதசமி அமைகின்றது ..
இந்த விஜயதசமி நன்னாளானது தாய்மையின் திருவுருவிலே முப்பெருந்தேவியரின் அருள்பெற்று .. ஆற்றல்பெற்று . வாழ்விலே மனவலிமையும் .. தன்னம்பிக்கையும் .. சகலசெல்வங்களும் .. வாழ்வைச் சீரானவழியில் கொண்டு நடத்த நல்லறிவும் நமக்கு நிச்சயம் கிட்டும் என்ற உறுதியையும் தருகின்றது ..
உலகையும் .. உலக உயிரினங்களையும் வாட்டிவதைக்கும் 
பல்வேறு துன்ப துயரங்கள் யாவும் துடைதெரியப்படும் என்ற நம்பிக்கையை நம்மனங்களிலே விதைக்கும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது ..
ஒன்பது இரவுகள் சக்தியாக விளங்கிய தேவி பத்தாம்நாளாகிய இன்று சிவனுடன் அர்த்தநாரியாகிவிடுகிறாள் என்பது ஐதீகம் ..
சிவசக்தியைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்றிடுவோமாக ! ஓம் சிவசக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED VIJAYADASAMI DAY .. MAY SHIVASHAKTHI BLESS YOU AND GUIDE YOU TO ACHIEVE THE BEST IN YOUR LIFE .. " JAI SHIVSHAKTHI "

No comments:

Post a Comment