கார்த்திகை தீபம், நாம் அறிந்திடாத பின்னணி...
கார்த்திகை தீபம், தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் இந்த விழா கொண்டாடப் படுகிறது.
தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
நமது சங்க இலக்கியங்களில் இதை பற்றிய குரிப்புகள் காணபடுகின்றன. தமிழகத்தில் பழைமையான விழாக்களில் இதுவும் ஒன்று என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. இந்த விழாவை பற்றி நம் மதங்களில் சொல்லபடுகின்ற கருத்துக்கள் நீங்கள் அறிந்தவையே.
அனால், இந்த விழாவின் பின்னணியில் ஓர் அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. இன்று நம் நாட்டில் பரவி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பதற்கு நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்து.
தமிழகத்தில் மழை காலம் முடிந்த நிலையில் கொசு மற்றும் இன்ன பிற நுண்ணுயிர்கள் ் பெரிதும் பரவும் இந்த கார்த்திகை மாதத்தில நம்மை காத்து கொள்வதற்கு இந்த தீப திருநாள் வழி வகை செய்கிறது. கார்த்திகை தீபத்தில் பயன் படுத்த படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து வரும் நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது.
நம் குடும்பத்தை பற்றி பெரிதும் அக்கறை படும் நாம், பிற வேலைகளை காரணம் காட்டியும், leave கிடைக்கவில்லை என்று சாக்கு சொல்லியும் இந்த விழாவை தவிர்க்கலாமா ?
இந்த உண்மை அறியாமல், "பழைய வழக்கம் நமக்கு எதற்கு, சாஸ்திரத்துக்கு ரெண்டு விளக்கு ஏற்றுவோம்" என்று இல்லாமல் இல்லம் நிறைய விளக்கு ஏற்றி நம்மை காத்து கொள்வோம். வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். அழகன் தீபாராதனை தீவனம்
No comments:
Post a Comment