SWAMIYE SARANAM IYYAPPA...TODAY OUR 24TH DAY VIRADHAM......GURUVE SARANAM SARANAM.....னைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கார்த்திகைமாதம் செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதானாகிய கார்த்திகேயனுக்கு உகந்த நாளாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! ஞானமே உடலாகவும் .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி என்னும் முச்சக்திகளை மூன்றுகண்களாகவும் .. இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகனே ! தன் அடியார்கள் வேண்டும் நலங்களை எல்லாம் அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மையான குணம் வாய்ந்தவன் .. நம் உள்ளத்தைக் கவரும் பண்புடையான் .. ’ கந்தன் ‘ என்று சொன்னாலே ! வந்தவினையும் .. வருகின்ற வல்வினையும் நீங்குமே ! எளியோர்க்கும் எளியோனான வேலவனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம் ! சரணம் சரணம் சரவணபவ ஓம் ! சரணம் சரணம் ஷண்முகா சரணம் ! வாழ்க வளமுடனும் ! நலமுடனும் ! GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE PROTECT YOU ALWAYS IN WHATEVER YOU DO .. AND WHEREVER YOU ARE .. " OM MURUGA " ..

No comments:

Post a Comment