TODAY VRADHAM 23RD DAY..SWAMY SARANAM...GURUVE SARANAM.அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று கார்த்திகை மாத சோமவார விரதமும் .. பிரதோஷமும் சேர்ந்து வருவதால் ஆலயத்திற்குச் சென்று சிவபெருமானைத் தரிசிப்பது சாலச் சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக மிளிரவும் .. எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் .. வாழ்த்தி வணங்குகின்றேன் ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! கார்த்திகைமாதம் திங்கட்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது .. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தவிரதம் சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்தால் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பெற்றான் .. கார்த்திகைமாதத்தில் இறைவன் அக்னிப்பிழம்பாக இருப்பார் .. எனவே அவரை குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள் .. பெண்கள் திருமாங்கல்யம் நிலைக்கவேண்டுமென சிவாலயங்களில் கார்த்திகைமாத திங்கட்கிழமைகளில் வழிபாடு நடத்தி விரதமிருப்பது காலங்காலமாய் இந்துக்களிடையே இருந்துவரும் வழக்கம் .. ஒளிமாதமான கார்த்திகை சோமவார நாட்களில் சிவதரிசனம் செய்து குடும்பத்தில் ஒற்றுமையும் .. இருவரும் இணைந்து சமாளிக்கும் மனதிடமும் அளிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக .. ” ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI BHOLE NATH " .. OM NAMASHIVAAYA ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment