TODAY OUR 21ST DAY VRADHAM.......SWAMIYEE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.......PANVEL BALAGANE SARANAM SARANAM...அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் .. மனநலமும் உடல் நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் ..அண்ணாமலையோனை பிரார்த்திக்கின்றேன் .. திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது .. இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .. ரமணமகரிஷி தவம் இருந்து அருள்பெற்ற தலம் .. இங்கு மலையே இறைவனின் சொரூபம் எனவே மலைவலம் இங்குச்சிறப்புடையது .. வல்லாள மன்னனுக்கு மகனாக வந்தவதரித்த இறைவன்அருள்செய்த பதி இதுவே .. இறைவன் - அருணாசலேஸ்வரர் .. அண்ணாமலையார் .. இறைவி - அபீதகுஜலாம்பாள் .. உண்ணாமுலை .. தலமரம் - மகிழம் ..தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் .. சம்பந்தர் - அப்பர் பாடல் பெற்றது .. நினைக்க முக்தி அளிக்கும் திருத்தலம் திருவண்ணாமலை இது அனைத்து உயிர்களுக்கும் பக்குவத்தைத் தந்து மேலான வீடுபேற்றினைக் கொடுக்கக் கூடியது .. “ நான் இந்த உடம்பே ! என்ற அறியாமையால் தன்னை இறைவனிடம் வேறுபடுத்தி உயிர்கள் பிறவிச் சுழலில் உழல்கின்றன .. எங்கும் நிறைந்த பரம்பொருளே ! நாம் ! என்று நிறுத்துவதே பல்வேறு சமயங்களின் மற்றும் தத்துவங்களின் நோக்கமாகும் .. அண்ணாமலையோனைப் போற்றுவோம் ! மரணமில்லா பெருவாழ்வு பெற்று நாமும் நித்ய அனந்த நிலையினை அடைவோமாக ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY .. AND MAY GOD BLESS YOU AND SHOWER YOU WITH INNER PEACE AND HAPPINESS ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment