அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ..
இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக ..
இன்றிரவு ஆருத்ரா தரிசனமும் .. நடேசரபிஷேகங்களும் அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறுகின்றது .. இதனைக்கண்டு தரிசித்தால் என்றென்றும் மகிழ்ச்சியுடனும் .. தடைகள் நீங்கி வளமான வாழ்வும் வாழலாம் ..

ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்டமஹா விரதங்களுள் ஒன்று .. மார்கழிமாத மதிநிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரனும் தன்னை தலையில் அணிந்து
சாபவிமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுதகலைகளால் ஆசீர்வதிக்கின்றான் ..

பகவத்கீதையில் .. ” மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் “ என்று கூறிய கிருஷ்ணபரமாத்மா .. அதே கீதையில் .. “ நட்சத்திரங்களில் நான் திருவாதிரை ” என்றும்
கூறியுள்ளார் .. இதிலிருந்தே திருவாதிரை நட்சத்திரத்தின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளமுடியும் .. அத்தகைய சிறப்புமிக்க திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும் ..

நடராஜரின் ஆருத்ரா தரிசனம் அவரது ஐந்தொழில்களான ஆக்கல் ..காத்தல் ..அழித்தல் .. மறைத்தல் .. அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமைந்தது அதன்பொருட்டே
கோவில்களில் பஞ்சகிருத்திய உற்சவம் நடந்துவருகிறது ..

ஒருசமயம் மஹாவிஷ்ணு திருப்பாற்கடலில் ஆதிசேஷன்மீது
பள்ளிகொண்டிருந்தார் .. விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்துகொண்டிருத்தாள் லக்ஷ்மிதேவி ..
கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று ஆஹா ! அருமை ! அற்புதமான நடனம் ! என்று மனமுறுகி கூறினார் .. அவரது இந்த நிலையைக்கண்டு ஆதிசேஷனும் .. மஹாலக்ஷ்மிதேவியும் விழித்தனர் .. சிறிதுநேரத்திற்குபின் கண்விழித்துபார்த்த மஹாவிஷ்ணுவிடம் தங்களின் சந்தேகத்தை இருவரும் கேட்டனர் ..

திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத்
தாண்டவத்தை என்னுடைய ஞானக்கண்ணால் பார்த்தேன் ..
அதைக்கண்டு மெய்சிலிர்த்ததால் தான் அவ்வாறு கூறினேன் என்றார் மஹாவிஷ்ணு .. மேலும் அவர் சிவபெருமானின் ஆனந்தத்தாண்டவத்தைப் பற்றிச்சொல்லச்சொல்ல ஆதிசேஷனுக்கு உடல் சிலிர்த்தது .. ஆதிசேஷனின் பரவசத்தைக்கண்ணுற்ற மஹாவிஷ்ணு .. ஆதிசேஷா !
உனது ஆசை எனக்குப் புரிகிறது நீயும் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருக்கின்றாய் .. அப்படியென்றால் நீ பூவுலகில் பிறந்து தவமிருக்கவேண்டும் .. அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணமுடியும் .. இப்போதே புறப்பட்டு போய்வா என்று கூறி
விடைகொடுத்தார் ..

ஆதிசேஷன் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார்
இடுப்புவரை மனித உடலும் .. இடுப்புக்கு கீழே பாம்புத்தோற்றமும் கொண்டதாக அவரது உடலமைப்பு அமையப்பெற்றிருந்தது .. பதஞ்சலி முனிவர் பலகாலம் தவமிருந்து வந்ததன் காரணமாக ஒருநாள் திருவாதிரைத் தினத்தன்று சிதம்பரத்தில் தன் திருநடன காட்சியை சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்குக் காட்டி அருளினார் ..
அன்றைய தினமே “ ஆருத்ரா தரிசனமாகும் “ ..

மார்கழிமாதத் திருவாதிரை தினத்தன்று விரதமிருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால் நல்ல கணவன் கிடைப்பார் .. தாலிப்பலன் பெருகும் .. பாவங்கள் நீங்கும் ..
அறிவும் .. ஆற்றலும் .. கூடும் .. விடிலன் .. வியாக்கிரபாதர் .. போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர் ..

திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களிசெய்து படைப்பார்கள் .. களி என்பது ஆனந்தம் என்றும் பொருள்படும் ..அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய
நிலையில் ஆன்மா ஆனந்தநிலையில் இருக்கும் .. ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு
அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனமாகும் ..

சிவனைப்போற்றுவோம் சகலசௌபாக்கியங்களையும் பெற்றிடுவோமாக ! ஓம் நமசிவாய !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY AND A MERRY CHRISTMAS TOO .. MAY YOU BE BLESSED WITH HAPPINESS AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA "
No comments:
Post a Comment