PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. “ விழுதல் என்பது வேதனை .. விழுந்த இடத்தில் இருந்து மீண்டும் எழுதல் என்பது சாதனை “ .. இந்த வாக்கியத்திற்கு இணங்க தமிழக மக்கள் மீண்டும் சகஜவாழ்க்கைக்குத் திரும்பிட ஆத்மபலத்தையும் .. மனதைரியத்தையும் தந்தருளும்படி எல்லாம் வல்ல கணபதியை இருகரம்கூப்பி இறைஞ்சுகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! பிள்ளையார்சுழி போடுவது எதற்காக - உலகத்தில் முதன்முதலாக எழுத்தைக் கண்டுபிடித்து எழுதத் தொடங்கியவர் விநாயகர்தான் என்று புராணம் கூறுகிறது .. மகாபாரதத்தை வியாசர் எடுத்துரைத்தபோது அதை அழியாமல் காக்கும் பொருட்டு விநாயகர் தன் தந்தங்களில் ஒன்றை ஒடித்து அதையே எழுத்தாணியாக்கி எழுதினார் .. எழுத்தைக் கண்டுபிடித்த கணபதிக்கு நம் நன்றியைச் சொல்லும் விதமாக எதை எழுதத் தொடங்கினாலும் ( உ ) பிள்ளையார்சுழியைப் போடுகிறோம் .. அதன்படி இவர் முழுமுதற்கடவுள் என்கிறோம் .. முதல் எழுத்தாளரும் விநாயகப்பெருமானே ! தடைகளை விலக்கி தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியினை அளிப்பவரும் கணபதியே ! நல் அறிவையும் புகட்டுபவரும் அவரே ! கணபதியைப் போற்றுவோம் சகலநலன்களையும் பெறுவோமாக ! “ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE DIVINE BLESSINGS OF LORD GANAPATHY .. MAY HE BE WITH YOU ON THIS DAY AND ALWAYS .. " JAI GANAPATHY "

No comments:

Post a Comment