தொடர்ச்சி.......
செவ்வாய் கிழமை காலை குருசுவாமி கட்டுநிறை முடிந்தவுடன் இரண்டு நாட்களாக மண்டபத்திற்கு வந்திருந்து பூஜை மற்றும் கட்டுநிறையில் கலந்து கொண்ட ராமநாதபுரம் ராணி அவர்களை குருசுவாமி பிரசாதம் கொடுத்து கௌரவித்தார். வருடா வருடம் பாபநாசம் நாம் வரும்போது வேண்டிய உதவிகளை செய்த ராணிக்கு குருசுவாமி கௌரவித்தது மிகவும் சாலச் சிறந்ததது.
கட்டுநிறை தொடர்ந்தது
காலை இது வரை இல்லாத வகையில் பாலகர் இரண்டாம் நாள் கட்டுநிரைக்கு காட்சிஅளித்தார். குவைத்லிருந்து குடும்பத்தோடு வந்திருந்த நாகராஜன் தொடங்கி குருசுவாமி கட்டுநிறை நிகழந்தது. குருவின் கட்டு அனைவரையும் கட்டி போட்டது. அனைவரும் அவர் பதம் பணிந்து ஆசீர்வாதம் பெற்றோம்.
ராமநாதபுரம் ராணிக்கு மரியாதை
செவ்வாய் கிழமை காலை குருசுவாமி கட்டுநிறை முடிந்தவுடன் இரண்டு நாட்களாக மண்டபத்திற்கு வந்திருந்து பூஜை மற்றும் கட்டுநிறையில் கலந்து கொண்ட ராமநாதபுரம் ராணி அவர்களை குருசுவாமி பிரசாதம் கொடுத்து கௌரவித்தார். வருடா வருடம் பாபநாசம் நாம் வரும்போது வேண்டிய உதவிகளை செய்த ராணிக்கு குருசுவாமி கௌரவித்தது மிகவும் சாலச் சிறந்ததது.
குருசுவாமியுடன் துரை சேட்
வருடா வருடம் நாம் மலைக்கு செல்லும்போது குருசுவாமி அருகிலே துரை சேட் இருப்பது கண்கூடு. தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இந்த வருடம் நம்மோடு வர இயலவில்லை. அவர் தனது குடும்பத்தாரோடு வந்திருந்து பாலகரின் அருளோடு குருவின் ஆசியையும் பெற்று சென்றார். வழக்கம்போல அவரது பேரன் மூலம் திருநெல்வேலி அல்வா, காரம் அனைத்து சுவாமிமார்களுக்கும் வழங்கப்பட்டது.
ஸ்ரீராமுக்கு குருவின் ஆசி
"செவிக்கு வேலை இல்லாத பொது சிறிது வயிற்ருக்கும் ஈயப்படும்" என்பது போல உணவு வேளையில் சளைக்காமல் அனைவருக்கும் உணவு பரிமாறி கடைசியில் உண்பது ஸ்ரீராம் சுவாமியின் குணம். உணவு பரிமாறும் இடத்தில் பொறுப்பேற்று பம்பரமாக செயல்படுவார். யாத்ரா தொடங்கி முடியும் வரை இது தொடரும். அவரை சென்னை ராமநாத சுவாமி கௌரவிக்க ஆசைப்பட்டார்.. அதனை ஏற்றுகொண்ட குருசுவாமி ஸ்ரீராமுக்கு பொன்னாடை போர்த்தி ஆசி வழங்கினார். .
பயணம் தொடர்ந்தது
கட்டுநிறை முடிந்து அனைவரும் குருபாலாவிலிருந்து தேங்காய் உடைத்து குழிவேலியில் கிரமமாக அமர்ந்த பாங்கு நேர்த்தியாக அமைந்தது. ஸ்ரீராம் சரண கோஷம் கூற அனைவரும் எதிரொலிக்க குருவின் ஆசியோடு பஸ் புறப்பட்டது.
எருமேலி பேட்டை துள்ளல்
பாபநாசத்திலிருந்து புறப்பட்டு மாலை எட்டு மணிக்கு எருமேலி ராஜுவின் இல்லம் வந்தோம். கன்னிமார்கள் அனைவருக்கும் பாலகர் முன்னிலையில் அரிதாரம் பூசி பேட்டை துள்ளலுக்கு தயார் செய்தார் குருசுவாமி. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பினை போல குருவின் ஆசியுடன் பாவர் சுவாமி கோயிலை நோக்கி நடை போட்டனர்.
"சுவாமி திந்தகதோம்
ஐயப்ப திந்தகதோம் "
என ஆடிப்பாடி பேட்டை துள்ளி பாடி மகிழ்ச்சி அடைந்தனர் கன்னிமார்கள்.
பம்பாஅன்னதானம்
எருமேலியிருந்து காலை புறப்பட்டு பம்பா மதியம் வந்தடைதோம். தானத்தில் சிறந்தது அன்னதானம். குருசுவாமி அன்னதானம் பம்பையில் பிரசித்தம். மாலை ஐயப்ப சேவா செயலர் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அவரோடு குருசுவாமி மன்னி அன்னதானத்தில் பங்கேற்றார். மன்னி அன்னதானத்தில் முதல் ஆளாக தொடக்கி ஹரிஹரச்வரம் பாடல் ஒலிக்கும் வரை அனைவரும் அன்னதானத்தில் பங்கேற்றோம்.
சரணாகதி
வியாழன் காலை பாலகருடன் பம்பா அடைந்தோம். பம்பாவில் தீர்த்தவாரி நடந்தது. பாலகரை தனித் தனியாக கையில் ஏந்தி பம்பாவில் மூழ்கி எழுந்து நீராடி பாபவிமோசனம் பெற்றோம்.
எவன் ஒருவன் தன்னுடைய கவலை துக்கம் பிரச்சனைகள் அனைத்தையும் முழுதாக இறைவனிடம் சமர்பித்து சரணாகதி அடைகிறானோ அவனை ஐயன் சுவீகரித்து அருள் பாலிக்கிறார் என்பதை புரிய வைப்பது சரணாகதி. இது நமது ஐயப்ப குடும்பத்தில் மட்டும் நடக்கின்ற ஒன்று.
மனம் லேசாகி பஞ்சு போல மாறிவிடும். குருவின் முன்னிலையில் சரண கோஷம் எழுப்பி ஐயனின் காலில் அனைத்து கஷ்டங்களையும் அனைவரும் சமர்பித்தோம்.
மனம் லேசாகி பஞ்சு போல மாறிவிடும். குருவின் முன்னிலையில் சரண கோஷம் எழுப்பி ஐயனின் காலில் அனைத்து கஷ்டங்களையும் அனைவரும் சமர்பித்தோம்.
இச்சமயம் அங்கு வந்திருந்த ஐயப்பனை பற்றி மாதந்தோறும் வெளிவரும் பத்திரிக்கையின் ஆசிரியர் சபரிமலை பற்றிய சில தகவல்களை கூறி அன்னதானத்தின் சிறப்பினை பற்றியும் சொற்பொழிவு ஆற்றினார். அவரையும் குரு ஆசிர்வதித்து கௌரவித்தார்
சன்னிதானம் நோக்கி பயணம்
வியாழன் மதியம் மூன்று மணியளவில் அனைவரும் குருவின் கையினால் இருமுடி வாங்கி தலையில் வைத்து கொண்டு சரண கோஷம் கூறிக் கொண்டு ஐயனை தரிசிக்க தயாரானோம். எருமேலி, சரங்குத்தி, சபரிபீடம், அப்பாச்சிமேடு கடந்து பதினெட்டாம்படி ஏறி ஐயனை கண்குளிர தரிசனம் கண்டோம். 41 நாள் விரதத்தின் பலன் அந்த ஒரு நிமிட தரிசனத்தில் பூர்த்தி ஆனது. அனைவரும் சன்னிதானம் ஐயப்ப சேவா சமாஜம் அடைந்து குருவின் பதம் பணிந்து இருமுடியை சமர்ப்பித்தோம். மலை ஏறும்போது சேஷன் சுவாமிக்கு ஏற்பட்ட சிறு பிரச்னையும் பாலகர் அருளால் தீர்ந்து அவரும் ஐயனை தரிசித்து அருள் பெற்றார். கடைசி நேரத்தில் நமது யாத்ராவில் இணைந்த ராமநாத சுவாமி குருவின் கட்டினை சுமக்கும் பாக்கியத்தினை பெற்றார். என்னே குருவின் அருள்? "செயற்கரிய செயல் செய்வோர் பெரியோர் " என்ற கூற்று உண்மையானது இங்கு....
நெய் தேங்காய் நேர்த்தி ...
"கருமமே கண்ணாயினார் காவியநாயகனாய் களம் நிற்பார் " என்ற பழமொழிக்கு ஏற்ப குருசுவாமி நெய் தேங்காய் எடுத்து உடைத்த போது அவரவர் விரத பலன் கண் முன் நின்றது. அதுவும் அவர் எடுத்த முதல் தேங்காய் கன்னிசாமி அபிஷேக் தேங்காய்!! . என்னே அவன் அருள்!! அனைவரின் நெய் தேங்காயும் அற்புதமாய் அமைந்திருப்பதாக குருசுவாமி கூறினார். பிறகு நெய் அபிஷேகம் செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்த பிறகு அனைவரும் பம்பா புறப்பட்டோம்.
நிறைவான யாத்திரை
வெள்ளி மதியம் பம்பாவிலிருந்து புறப்பட்டோம். கடுமையான கூட்டம் காரணமாக பஸ் வரமுடியாத நிலைமை ஏற்பட்டது. அந்த பிரச்ச னையும் ஹரிஷ் சுவாமியால் சடுதியில் தீர்த்து வைக்கப்பட்டது. அனைவரும் ஆனந்தமாக இரவு எர்னாகுளம் அடைந்தோம். சனியன்று காலை அனைவரும் அங்கு சிவன் கோயில் குளத்தில் நீராடி அங்குள்ள கோயில்களை தரிசித்து இருப்பிடம் அடைந்தோம்.
சத்தியத்தின் குரல்
யாத்ரா முடியும் கட்டத்தில் வளமைபோல் குருசுவாமி சொற்பொழிவு ஆற்றினார். மறக்க முடியாத பிரசங்கம் என்றே கூறலாம். மிகுந்த உணர்ச்சி பூர்வமாக இருந்தது. ஆர்ப்பரிக்கும் கடல் போல , பொங்கி வரும் அருவிபோல், தவழ்ந்து வரும் நதி போல, நிர்மலமான ஓடை போல அவர் பேச்சு அமைந்தது என்றால் மிகை ஆகாது. அவர் தனது பேச்சில் "இந்த யாத்திரை எவ்வாறு மற்ற கோவில்கள் செல்வதிலிருந்து வேறுபட்டது. நாம் இறைவனை சென்று மற்ற யாத்திரைகளில் தரிசிப்போம். ஆனால் சபரி யாத்திரையில் ஐயனாக நாமாக மாறி விடுகிறோம். மாலை போட்ட நாளிலிருந்து அய்யன் நம்முடனேயே வாசம் செய்கிறான். அதனாலேயே அனைவரும் நம்மை பார்த்து சாமி சரணம் என்று கூறுகின்றனர். இதற்கு மட்டுமே நாற்பது நாள் விரதம். கோபம், காமம், ஆசை அனைத்தில் இருந்தும் நாம் விடுபடுகிறோம் " என்று இந்த யாத்ரியையின் பெருமையை தெளிவுற கூறினார்.. ஒவ்வொருவார்த்தையும் சத்தியத்தின் குரலாக ஒலித்தது. தன்னுடைய இந்த பாலகன் குடும்பம் தொடர்ந்து தடங்கல் இல்லாமல் தொடரவேண்டும் என்ற தன் அவாவினை வெளிபடுத்தினார்.அனைவரின் கண்களை கண்ணீர் திரையிட்டது. அனைவரும் அவரது பேச்சில் கட்டுண்டு கிடந்தோம். இறுதியில் நான் எழுதிய இரண்டாவது பாடலையும் அரங்கேற்றி ஆசி புரிந்தார்.
அந்த பாடல்
சுபம்
சனியன்று மதியம் அனைவரும் மும்பைக்கு குரு சுவாமிக்கு பிரியா விடை அளித்து சென்னை கிளம்ப தயார் ஆனோம்.
இந்த யாத்திரை ஒரு மறக்க முடியாத யாத்திரையாக அமைந்தது என்றால் மிகையாகாது. கடந்த 45 நாட்களாக பாலகர் நம்முடனே இருந்தார். மனம், உடல், எண்ணம் அனித்தும் தூய்மை அடைந்தது. குறிப்பாக குருசுவாமி சென்னையில் இருந்த இரண்டு நாட்கள் இரு நிமிடங்களாக கடந்தது.
சுவாமியே சரணம் ஐயப்பா !!
குருவே சரணம் சரணம் !!
பன்வேல் பாலகன் பதம் போற்றி! போற்றி!!

No comments:
Post a Comment