PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய மஹாவிஷ்ணுவுக்கு உகந்த நாளுமாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழ்ந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! விஷ்ணுபகவானின் ஐந்துநிலைகள் -- 1 - பரம் - பரம் என்ற நிலையானது வைகுண்டத்தில் ஸ்ரீமத்நாராயணன் பூமாதேவி .. நீளாதேவியுடன் அலங்கார ரூபனாய் .. கருடன் .. அநந்தர் .. விஸ்வக்ஷ்னர் .. ஆகியோரால் சூழப்பட்டு இருக்கும் நிலை ஞான திவ்யமங்கள வாசுதேவர் வடிவம் இது .. 2 - வ்யூகம் - வாசுதேவர் .. பிரத்யும்னன் .. அநிருத்தன் .. ஷங்கர்வுணன் .. ஆகிய நான்கு வடிவங்களாக அவதரித்த நிலை .. உலகத்தைப் படைக்க .. காக்க .. அழிக்க .. தியானிக்க பூஜைசெய்யப்படவுமானவை இவை .. 3 - விபவம் - இது பகவான் எடுத்த அவதாரங்களைக் குறிப்பது .. தன்வந்ரி ..ஹயக்ரீவர் .. மச்சம் .. கூர்மம் .. வராகம் .. நரசிம்மம் வாமனம் .. பரசுராமர் .. ராமர் .. பலராமர் .. கிருஷ்ணர் .. இப்படிப் பல அவதாரங்களை உலகில் ஒவ்வொரு சமயத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு வடிவில் அவதரித்தது தருமத்தைக் காப்பாற்றவும் .. நல்லோர்க்கு அருளவும் .. தீயோரை தண்டிக்கவுமே அவதாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன .. 4 - அந்தர்யாமி - பரமாத்மாவாக எல்லா ஜீவராசிகளுக்கு உள்ளேயும் உறைபவராகவும் .. ஜீவாத்மாவாக உடலினுள் உயிர்போல இதயத்துள் வாழ்பவராயும் .. ஜீவனின் குற்றங்கள் குறைகளால் பாதிக்கப்படாதவராயும் இருக்கின்ற நிலை .. 5 - அர்ச்சாரூபம் - நாம் கோயில்களில் வணங்கும் கல் .. பொன் செம்பு .. ஐம்பொன் .. மரம் .. கதை .. போன்றவற்றால் செய்யப்பட்ட பலப்பல விக்ரஹங்களாக அடையாள மூர்த்தங்களாய் இருப்பது கோயிலில் வணங்கப்படும் இந்த சிலைவடிவங்களில் முழுமையாக கடவுள் வாசம்செய்கிறார் அர்ச்சாவதாரத்தில் தான் கடவுளின் தன்மை முழுமை அடைகிறது .. எனவே ஆலயம் சென்று வழிபடுவது ஆண்டவனையே தரிசித்துப் பார்ப்பதற்குச் சமன் .. விஷ்ணுபகவானைப் போற்றுவோம் ! சகலசெல்வங்களையும் பெறுவோமாக ! ஓம் நமோ நாராயணா ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU MAY YOU BE BLESSED WITH SUCCESS .. PROSPERITY .. AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAA "


No comments:

Post a Comment