அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியாதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் ..மன இருளைப்போக்கி ஆரோக்கிய வாழ்வைத்தரும் சூரியனை வழிபாடு செய்து தங்களனைவருக்கும் கிரகதோஷங்கள் நீங்கி எல்லா வளமும் பெற வாழ்த்தி வணங்குகிறேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத்
காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகி ..
பூசனை உலகோர் போற்ற எங்கும் புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா!
எமை ரட்சிப்பாய் செங்கதிரோனே ! போற்றி ! போற்றி !
இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியன் தன் அருள்
ஒளியால் அறியாமை என்னும் இருள் அகற்றி அறிவென்னும்
ஒளிச்சுடரைத் தூண்டும் சக்திமிக்க பிரத்யட்ச தெய்வ வடிவாகத் திகழ்கிறான் .. அதிகாரம் .. ஆட்சி .. ஆளுமை போன்றவற்றிற்கு அதிகாரம் உள்ளவர் இவரே ! சூரியனின் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது ..
சூரியனை வழிபடுவதால் உலகில் அடையமுடியாதவையே
இல்லை .. உடல் ஆரோக்கியத்தை அளிப்பதிலும் அருட்கடல் ..
இதயநோயை நீக்குபவர் ..தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிப்பது சிறந்தது .. “ ஓம் ஆதித்யாய நமஹ”
எனும் மந்திரம் ஆதவனின் அருளைப் பெற உதவும் ..
சூரியனைப்போற்றுவோம் ! சகலநன்மைகளையும் பெறுவோமாக! ஓம் சூர்யாய நமஹ ! வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் ..
GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA ..
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS
" OM SURYAAYA NAMAHA " .. jAI SURYA DEV ..
No comments:
Post a Comment