PANVEL BALAGAN PATHAM POTRI...GURUVE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 

தேய்பிறை அஷ்டமித் திதியாகிய இன்று காலபைரவருக்கு உகந்த நாளாகும் .. ஆலயம் சென்று பைரவரை நெய்தீபம் ஏற்றி 
வழிபட அனைத்து தோஷங்களும் .. பில்லி .. சூனியம் .. போன்ற தொல்லைகளிலிருந்தும் விடுதலை பெறலாம் .. 
தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாகத் திகழவும் ஸ்ரீ பைரவப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! 
சூலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

பைரவர் சிவனது அம்சம் ஆவார் .. பைரவர் என்றாலே அடியார்களின் பயத்தையும் .. பாபத்தையும் நீக்குபவர் என்று பொருள் .. எந்தவிதபூஜைகளும் செய்யாவிட்டாலும் கூட
இக்கட்டான நேரத்தில் முழுமனதுடன் அவரை நினைத்தாலே
போதும் சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றச் செய்வார் .. 

நம்முடைய கர்மவினை நம்மை பைரவரை தொடர்ந்து வழிபட
( நிறைவான வாழ்க்கை வாழ்ந்திட) அனுமதிக்காது .. 
நிறைய தடைகளை ஏற்படுத்தும் .. சோம்பேறித்தனத்தை 
உண்டு பண்ணும் .. இதையெல்லாம் பொருட்படுத்தாது 
நம்வாழ்வில் தொடர்ந்து வழிபாடு செய்து வரவேண்டும் .. அவரே நம்வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் தீர்மானிக்க ஆரம்பிப்பார் .. குருவாக இருந்து வழிநடத்த ஆரம்பிப்பார் .. 

தாங்கமுடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் .. விபத்து .. துர்மரணம் .. 
ஜாதக தோஷங்கள் .. மாந்திரீக பாதிப்புகள் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே ! இத்துன்பங்களிருந்து விடுபட பைரவரைத்தான் சரணடையவேண்டும் ..

தேய்பிறை அஷ்டமித் திதியே பைரவருக்கு ஏற்ற நாள் ..
அன்றே அஷ்டலக்ஷ்மிகளும் சொர்ணபைரவரிடம் தாங்கள் இழந்த சக்திகளை மீண்டும் பெற்று .. தாங்கள் பெற்ற சக்திகளை பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர் .. எனவே அன்று அவர்களால் .. நடைபெறும் எந்த நற்காரியங்களிலும் ஈடுபடமுடியாது .. அதனால்தான் அஷ்டமியன்று எந்த நற்காரியங்களையும் செய்யத்தயங்குவது .. 

பைரவரைப் போற்றுவோம் ! அஷ்டமா சித்திகளையும் பெற்றிடுவோமாக ! ஓம் ஸ்ரீகாலபைரவாயஹ நமஹ ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF 
" LORD BHAIRAVA " MAY HE SAFEGUARD YOU FROM ALL EVIL SPIRITS 
AND OBSTACLES .. " JAI BHAIRAVAAYA NAMAHA

No comments:

Post a Comment