PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. ஹனுமன் ஜெயந்தி நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .. இன்று 

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே !
வாயுபுத்ராய தீமஹி !
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத் !!

அவதாரங்கள் என்று சொல்லும்போது நமக்கு முதலில் நினைவு வருவது தசாவதாரம் .. சிவபெருமானும் .. மஹாவிஷ்ணுவும் பல்வேறு காரணங்களுக்காக பல அவதாரவடிவங்களை எடுத்து இருக்கிறார்கள் .
. அதன்படிதூய்மையானபக்தி .. ஞானம் .. வீரம் .. விவேகம் .. போன்றவற்றை எடுத்துக்காட்ட சாட்சாத் சிவபெருமான் எடுத்த அவதாரமே ஆஞ்சநேயர் என்பது சாஸ்திரங்கள் மூலம்
தெரியவருகிறது .. 


மார்கழிமாதம் .. மூலநட்சத்திரம் .. தனுசுராசி .. மேஷலக்னம் .. அமாவாசை திதியில் ஹனுமன் 
அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது ..
தமிழகத்தில் எங்குநோக்கினும் விநாயகர் கோயில் இருப்பதைப்போல் .. வட இந்தியாவில் ஹனுமனுக்கு அதிக ஆலயங்கள் உள்ளன .. ஹனுமன் சர்வதேவதா சக்திகளின் அம்சம் .. புத்தி .. பலம் .. கீர்த்தி .. தைரியம் .. மனோபலம் போன்றவற்றை அருளுபவர் .. இவரை வரம் அருளும் மூர்த்தி என்று சிறப்பித்துக் கூறுவார்கள் .. 
வேண்டியவர்களுக்கு வேண்டியதை வழங்கும் வரப்பிரசாதி என்பதால் இவருக்கு பிரார்த்தனைகள் .. நேர்த்திக்கடன்கள் .. வழிபாடுகள் அதிகம் ..
பஞ்சபூத தத்துவம் - 
 
சிரஞ்சீவியான அனுமன் வாயுபுத்திரன் என்பதால் காற்றை வென்றவர் ஆகிறார் .. 
சமுத்திரத்தை ராமநாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரைவென்றவர் ஆகிறார் .. 
பூமிபிராட்டியான சீதாதேவியின் பூரண அருளைப் பெற்றதால் நிலத்தை வென்றவர் ஆகிறார் .. வாலில்வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை எரித்ததால் நெருப்பைவென்றவர் ஆகிறார் .. 
வானத்தில் நீந்திப்பறக்கும் ஆற்றல்பெற்றதால் ஆகாயத்தை வென்றவர் ஆகிறார் ..

 இப்படி பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய ஆஞ்சநேயர் .. எங்கும் .. எதிலும் அடங்குவதில்லை 
“ ராமா “ என்ற இரண்டு எழுத்தில் மட்டுமே கட்டுண்டு கிடக்கிறார் ..
தீயசக்திகள் .. காத்து .. கருப்பு .. பூதபிசாசுகள் ..செய்வினை ..மனபேதலிப்பு .. சகலதோஷ தடைகள் நீங்குவதற்காக பக்தர்கள்
ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள் .. வாஸ்துகோளாறு உள்ள இல்லங்களில் வீட்டின் வாசல்படியில் ஹனுமன் படம் வைப்பதால் தோஷகோளாறுகள் நிவர்த்தியாகின்றன .. ஹனுமனை “ சொல்லின் செல்வன் “ என்று சிறப்பித்துக் கூறுவார்கள் .. இவரை வணங்குவதன் மூலம் சிறந்தபேச்சாளராக முடியும் .. நாவன்மைமேலோங்கும் ..

இன்றைய ஹனுமன் ஜெயந்தியில் ” அஞ்ஜேல் “ என்று ஆசிகூறி அபயம் அளிக்கும் ஹனுமன் பாதம் பணிவோம் ! எல்லா தோஷங்க்ளும் .. தடைகள் .. தடங்கல்களும் நீங்கி வளமானவாழ்வைப் பெறுவோமாக ! 
 
“ ஓம் ஆஞ்சநேயாய நமோ நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 


GOOD MORNING DEAR FRIENDS .. TODAY IS THE ' HANUMAN JAYANTI '
MAY MARUTI NANDA .. LORD RAMA .. AND LORD SHIVA BLESS YOU ALL FOR A SUCCESSFUL LIFE AND ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS AND PROSPERITY .. " JAI SHREE RAM " .. ' JAI HANUMAN '

No comments:

Post a Comment