PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamiye saranam iyyappa..Panvel Balagane saranam iyyappa




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று ஹரிஹர ப்ரஹ்மாதி தேவர்களாலும் சேவித்து வணங்கப்படுகின்ற அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் எல்லா வளமும் .. நலமும் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணுபத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

” லக்ஷ்மி கடாக்ஷ்ம் “ என்னும் சொல் ஏதோ செல்வச் செழிப்பை 
மட்டும் குறிப்பது அல்ல .. அது ஒரு மிகப்பெரிய பதம் .. 
சகல சௌபாக்கியங்களையும் குறிப்பது .. வெற்றி .. வித்தை ..
ஆயுள் .. சந்தானம் .. தனம் .. தான்யம் .. ஆரோக்கியம் இப்படி 
அனைத்தும் ஒருங்கே அமைவது தான் ” லக்ஷ்மி கடாக்ஷ்ம் “ 

லக்ஷ்மி என்றால் .. அழகு என்று பொருள் .. 
லக்ஷ்மீ என்றால் .. அன்பு .. கருணை .. இரக்கம் செல்வம் .. என்றும் பொருள் .. வெறும் அச்சடித்த காகிதங்களையும் .. சில்லறை நாணயங்களையும் தருபவளல்ல லக்ஷ்மி .. 

வில்வம் .. தாமரை .. வெற்றிலை .. நெல்லி .. துளசி .. மாவிலை
போன்றவை திருமகள் அருள்பெற்ற தெய்வீக மூலிகைகளாக 
கருதப்படுகின்றன .. பாற்கடலில் இருந்து தோன்றியதால் உப்பும் திருமகள் வடிவமாகவே கருதப்படுகிறது .. வெள்ளிக்கிழமைகளில் வீடுகளுக்கு உப்பு வாங்குதல் மிகவும் 
விசேஷம் .. 

ராமநாமம் உச்சரிக்கபடும் இடத்திற்கு அனுமன் தேடிவந்து விடுவான் .. அதேபோல ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில் .. அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள் .. ஆகவே இல்லந்தோறும் காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும் .. மாலைவேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம் .. அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும் .. 

அன்னையைப் போற்றுவோம் ! அவளது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! ஓம் சக்தி ஓம் !
வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI ..
MAY MAA LAKSHMI 'S BLESSINGS BRINGS YOU EVERY SUCCESS AND ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS AND PROSPERITY .. 
" JAI MAA SHAKTH

No comments:

Post a Comment