SWAMIYE SARANAM IYYYAPPA...GURUVE SARANAM.....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று 
மஹாவிஷ்ணுவிற்கு உகந்த புதன்கிழமையும் .. ஏகாதசி விரதமும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணு
பகவானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் 
இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. சகலசௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

கங்கையைவிடச் சிறந்த தீர்த்தம் இல்லை ..
விஷ்ணுவைவிட உயர்ந்த தெய்வம் இல்லை ..
காயத்ரியைவிட உயர்ந்த மந்திரமில்லை ..
தாயிற்சிறந்ததோர் கோயிலும் இல்லை .. 
என ஞானநூல்கள் கூறுகின்றன .. 

தைமாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை ‘ புத்ரதா ஏகாதசி ‘
என்பர் .. இதனை அனுஷ்டிப்போர் புத்திரபாக்கியம் வேண்டியிருந்தால் நல் மக்கட்பேறும் .. சுவர்க்கலோகத்தையும்
அடைவர் .. யாரேனும் இந்த ஏகாதசியின் பெருமைகளை கேட்டோ .. படித்தோ வந்தாலும் நிச்சயமாக அஸ்வமேதயாகத்தின் பலனையும் அடைவர் .. அனைத்து பாவவிளைவுகளும் அழிக்கப்படும் என யுதிஸ்டிர மன்னருக்கு ஸ்ரீகிருஷ்ணபகவான் அருளியுள்ளார் .. 

மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! பெருமாளின் பரிபூரணமான அருளையும் .. அன்பையும் பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோமாக ! ஓம் நமோ நாராயணா ! 
வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" PUTRADA EKADASI DAY ".. THIS EKADASI REMOVES ALL KINDS OF SINS .. MAKES ONE FAMOUS AND BE BLESSED WITH A SON TOO .. 
" OM NAMO NAARAAYANAA "

No comments:

Post a Comment