PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swamiye saranam iyyappa...guruve saranam saranam...



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையும் “ வசந்த பஞ்சமியுமாகிய “ இன்று அன்னை சரஸ்வதிதேவியை வணங்குவது சிறப்பு .. தங்களனைவரும் கல்வி வேள்விகளில் சிறந்துவிளங்கி .. மனதில் சாந்தமும் .. அமைதியும் .. அன்னையின் அருட்கடாக்ஷ்த்தையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
ப்ரம்ம பதன்யை ச தீமஹி !
தந்நோ வாணி ப்ரசோதயாத் !! 


அனைத்து உயிரினங்களுக்கும் அன்னையாக தன் கருணை மழையால் உலகை உய்விக்கும் அம்பிகையைப் போற்றும் 
விதமாக ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம் .. 

சித்திரைமாதம் - வசந்த நவராத்திரியும் ..
ஆடிமாதம் - வாரஹி நவராத்திரியும் ..
புரட்டாதி மாதத்தில் சாரதா நவராத்திரியும் .. 
தைமாதத்தில் .. தை அமாவாசை மறுதினம் துவங்கி - சியாமளா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது .. 

சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான 
” வசந்த பஞ்சமியில் “ ஸ்ரீ சரஸ்வதிதேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம் .. எனவே தென்னாட்டில் விஜயதசமி போல்
வடநாட்டில் ‘ வசந்தபஞ்சமி ‘ அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள் .. இன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும் .. 

சியாமளா நவராத்திரி தினங்களில் அம்பிகையை நம்மனமலரால் அர்ச்சித்து ஆனந்தம் அடைவோமாக ! 
ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
BASANT PANCHAMI ( VASANT PANCHAMI ) THE DAY IS BELIEVED THAT GODDESS SARASWATI WAS BORN .. HINDUS CELEBRATE VASANT PANCHAMI WITH GREAT FERVOUR IN TEMPLES .. HOMES AND EVEN SCHOOLS AND COLLEGES .. DURING VASANT PANCHAMI THE ADVENT OF SPRING IS FELT IN THE AIR AS THE SEASON UNDERGOES CHANGE .. NEW LEAVES AND BLOSSOMS APPEAR IN THE TREES WITH THE PROMISE OF NEW LIFE AND HOPE .. MAY MAA SARASWATI 

BLESS YOU AND SHOWER YOU WITH BRIGHTEST LIGHT OF KNOWLEDGE .. AND WISDOM .. .. " JAI MAA SARASAWATI "

No comments:

Post a Comment