SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வியாழக்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமும் சேர்ந்துவருவதால் ஆலயம் சென்று ஸ்ரீவிஷ்ணுபகவானைத் 
தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்கள் அனைவரது குடும்பத்திலும் என்றும் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் .. நல்லாரோக்கியமும் நிலவிட ஸ்ரீமன் நாராயணனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
கங்கையைவிடச் சிறந்த தீர்த்தம் இல்லை .. 
விஷ்ணுவைவிட உயர்ந்த தெய்வம் இல்லை ..
காயத்ரியைவிட உயர்ந்த மந்திரம் இல்லை ..
தாயிற்சிறந்ததோர் கோயிலும் இல்லை .. 
என ஞான நூல்கள் கூறுகின்றன ..
இன்றைய ஏகாதசியை ‘ ஷட்திலா ஏகாதசி ‘ என்பர் .. கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜைசெய்வதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் .. 
ஓர் ஏழை பிராமணருக்கு இரும்புவடைச்சட்டியில் எள்ளுடன் தானம் தரவேண்டும் .. மேலும் பாதுகை .. கூடை .. கரும்பு .. நீருடன் தாமிரகுடம் .. பசு .. பழம் முதலியவற்றையும் சேர்த்து ஆறுபொருள் தானம் தந்தாலும் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் 
ஆறுவகைதானம் செய்வதால் “ ஷட்திலா “ என அழைக்கப்படுகிறது ..
கருணாகரனைப் போற்றுவோம் ! கவலைகளைப் போக்குவோம் ! ஓம் நமோ நாராயணாய ! வாழ்கவளமுடனும் என்றும் நலமுடனும் ..

 ஜனங்கள் பாபாவை அணுகும்போது, பாபா அல்லா பலே கரேகே (கடவுள் அருள் புரிவார் ) என சொல்லிக் கொண்டே ஊதியை அளிப்பார்; அவர் கூறியது யாவும் அப்படியே நடக்கும். ஒரு முறை " நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன், அவை அங்கே நிகழ்கின்றன", என பாபா கூறினார். பாபாவின் சொற்கள் பிரமாணம் நிறைந்தவை. வறண்ட பாறையில் தண்ணீர் உள்ளது என அவர் கூறும்போது, அங்கே தண்ணீர் கிட்டியது. பஞ்ச பூதங்களும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டன. நெருப்பு, நீர், காற்று ஆகியவை அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிந்ததை பல பக்தர்கள் கண்டிருக்கின்றனர். கொழுந்துவிட்டு உயரமாக எரியும் தீ அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு அடங்கிற்று. பலத்த காற்றும் மழையும் அவருடைய ஆணையை மதித்து நின்றன. கொளுத்தும் வெய்யில் காலத்தில் எரியும் நெருப்பின் அருகே குளுமையான காற்று வீச வேண்டுமென பாபா சங்கல்பம் செய்ய, அவ்வாறே குளிர் காற்று வீசியது. மாண்டவர் மீண்டும் உயிர்பெற்றனர். தம் முன் இருப்பினும் இல்லாவிடினும் ஒருவனது இதயத்தில் உள்ளதை அறியும் சக்தியும், அதை சீர்படுத்தும் சக்தியும் அவரிடம் இருந்தது. அவர் சர்வாந்தர்யாமி என் உணரப்பட்டார்.

 

No comments:

Post a Comment