அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாகத் திகழவும் .. வினையற்ற செல்வம் பல்கிப்பெருகிடவும் .. அன்னை மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு !
லக்ஷ்மிரூபேண ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை !
நம்ஸ்தஸ்யை நமோ நமஹ!!
பொருள் - அனைத்து உயிர்களிலும் செல்வ வளமாய் விளங்கும் மஹாலக்ஷ்மி தேவியே ! நமஸ்காரம் !
அன்னையே ! உன்னை மீண்டும் ! மீண்டும் ! நமஸ்கரிக்கின்றேன் ! எம்மைக் காத்தருள்வாயாக !!
திருமகள் எனப்படும் மஹாலக்ஷ்மி எப்போதும் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை .. அந்த பரந்தாமனே ஒருமுறை அன்னையிடம் கேட்டதற்கு .. தர்மம் செய்யாதவர்கள் .. மிருகங்களை வதைத்து உண்பவர்கள் .. அதிகம் தேவையற்று கோவப்படுபவர்கள் .. பொய்சொல்பவர்கள் .. பொறாமைக்காரர்கள் .. தற்புகழ்ச்சி செய்பவர்கள் .. ஏழைகளுக்கு இரக்கப்படாதவர்கள் .. போன்றோர்களுக்கு
அன்னையின் அருள்கிடைக்காது .. ஒருவேளை வினைப்பயனால் கிடைத்திருந்தாலும் அது நிலைக்காது என்றாள் ..
அனைத்து உயிர்களிடமும் கருணை கொள்வோமாக ! அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் !
என்றும் நலமுடனும் !!
GOOD MORNING .. MAY THE DIVINE BLESSINGS OF GODDESS LAKSHMI BRINGS YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR DESIRES .. OM SHAKTHI OM ! JAI MAA LAKSHMI !
No comments:
Post a Comment