அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று ‘ தை அமாவாசையாகும் ‘
திங்களும் திருவோண நட்சத்திரமும் கூடிவருவதால் இதனை
“ மஹோதய புண்யகாலம் “ என்பர் ..
கடவுளுக்கு நிகராக பெற்றோரையும் .. முன்னோரையும் போற்றி அரவணைப்பது நம் முக்கியகடமை ! பெற்றோர் இவ்வுலகைவிட்டுச்சென்று மேலுலகம் அடைந்ததும் அவர்களுக்கு உரிய கடமைகளைச் செய்வதே நம் தலையாயக் கடமை ..
நாம் இந்த உலகிற்குவரக்காரணமாக இருந்தவங்களைத் திருப்தி செய்தால்தான் நம்மால் இந்த உலகிற்கு வந்தவர்களை அதாவது நம்சந்ததியினரைச் செவ்வனே காக்கமுடியும் ..
அந்தக்கடமையைக் குறைவறச் செய்தோமேயானால்
நம்முன்னோர்களே நம்மை காத்தருள்வார்கள் என்பது உறுதி ..
” மஹோதயம் “ என்றால் உன்னதத்திலும் உயர்ந்தது என்றும் பொருள் உண்டு .. பல ஆண்டுகளுக்குப் பின் ஒருமுறைவரும்
“ மஹோதய அமாவாசை புண்ணியகாலம் “ இன்று
( 8.2.2016 ) இடம்பெறுகின்றது .. பல ஆண்டுக்கொருமுறை நடைபெறும் புண்ணியகாலம் என்பதால் ..
“ மஹோதய புண்ணியகால தர்ப்பணம் ” மட்டுமே செய்யவேண்டும் ..
“ மஹோதய புண்யகால சிரார்த்தம் திலதர்பண ரூபேணே அத்யக்ரிஷ்யே “ என்று சொல்லி ஒரே தர்ப்பணம் செய்தால் போதும் .. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் கடலில் நீராடிக் கடற்கரை மணலிலேயே தர்ப்பணம் செய்யலாம் ..
மிக அரிதான இந்த புண்ணிய நன்னாளில் பக்தர்கள் யாவரும் கடற்கரையில் தம்முன்னோர்களுக்கு தர்ப்பணம்செய்து ஸ்தலசயனப்பெருமாளையும் .. ஞானப்பிரானையும் .. பூதத்தாழ்வாரையும் சேவித்து இறையருள்பெற்று இன்புற பிரார்த்திக்கின்றேன் .. “ ஓம் பித்ரு தேவோ பவ “ ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS OF OUR DEPARTED ANCESTORS ..
TODAY IS THE " MAHODOYA AMAVASYA DAY " IT'S THE RIGHT TIME AS CONCIDERED BY MANY TO RESPECT THE DEPARTED SOULS BY OFFERING THEM THARPANAM .. MAY YOU BE BLESSED ..
' OM PITHRU DEVO BAWA "
No comments:
Post a Comment